நிலம் கையகப் படுத்துவது தொடர்பான அவசரசட்டம் 5ந் தேதியுடன் காலாவதி ஆவதால் மீண்டும் அவசரசட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. நிலம் கையகப்படுத்த ஏற்கனவே அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பாதியில், இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக் சபாவில் மட்டும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ராஜ்ய சபாவில் ஆளும பா.ஜ.கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் அங்கு நிறைவேற்றப்பட வில்லை. இந்த மசோதாவுக்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அக்கட்சிகளை சமாளிக்கும் பொறுப்பை மூத்த அமைச்சர்களிடம் பா.ஜ.க ஒப்படைத்துள்ளது. ராஜ்ய சபாவில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றிவிடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதனால் அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது என மத்திய அரசு அதிகாரபூர்வமாக முடிவுசெய்தது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.