காஷ்மீரில் வெள்ளப் பெருக்கு நடவடிக்கை எடுக்க பிரதமர் உத்தரவு

 காஷ்மீரில் கன மழை காரணமாக ஜீலம் ஆறு அபாயகட்டத்தை தாண்டிபாய்கிறது. கரையோரங்களில் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். நிலச் சரிவில் வீடுகள் இடிந்து 8 பேர் உயிரிழந்தனர்
.

பிரதமர் நரேந்திரமோடி உத்தரவின் பேரில் சேதப் பகுதிகளை பார்வையிட மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விரைந்துள்ளார்.

காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழைவெள்ளத்தில் நூற்றுக்கானோர் உயிர் இழந்தனர். இந்தசோகம் நடந்த ஒரு ஆண்டுக்குள் மீண்டும் அங்கு மழைவெள்ளம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் மத்திய காஷ்மீரில் உள்ள பட்கம் மாவட்டம் சான்டினார் கிராமத்தில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில் 8 வீடுகள், 10 மாட்டு கொட்டகைகள் முற்றிலும் இடிந்துவிழுந்தன. மேலும் 26 வீடுகள் சேதமடைந்தன. இன்னும் 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. இந்நிலையில் பட்காம் மாவட்டத்தில் வீடுகள் இடிந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்ரீ நகரில் ராஜ் பாக் பகுதியில் தண்ணீர் தேங்கிநிற்கிறது. ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. சாலை மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஸ்ரீநகரில் ஜீலம் ஆறு அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது.

தெற்குகாஷ்மீரின் சங்காம் பகுதியிலும் ஆற்றில் தண்ணீர் அபாயகட்டத்தை தாண்டிசெல்கிறது.ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.ஆற்றில் தண்ணீர் அளவு 23 அடியை தாண்டிசென்றால், மாநில அரசு கரையோரத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதில் தீவிரமாக ஈடுபடும்.

தொடர்ந்து அங்கு மழைபெய்யும் என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் தொடர்பாக பீதி அடைய தேவை யில்லை என்று ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடு முறை அளிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீருக்கு அனைத்து உதவிகளையும் செய்யதயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நிவாரண உதவி பொருட்களுடன் அங்கு விமானம் விரைகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...