மதுரை–ராமநாதபுரம் இடையே ரூ.1,400 கோடி செலவில் நான்குவழிச்சாலை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ் சாலை எண் 49–ல், மதுரை–ராமநாதபுரம் இடையே 115 கி.மீ. தூரத்துக்கு நான்கு வழிச் சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம், ரூ.1,400 கோடி செலவில் நிறைவேற்றப்படும். தொடங்கியதில் இருந்து, இரண்டரை ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும்.
இந்த திட்ட நிறைவேற்றம் மூலம், தமிழர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுகிறது. முக்கிய வர்த்தக மையமாக திகழும் மதுரையை, தென் கிழக்கு திசையின் இறுதிமுனையில் அமைந்துள்ள ராமநாதபுரத்துடன் இணைக்க இத்திட்டம் வகைசெய்கிறது.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.