அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்

 தமிழகத்தில் வரும் சட்ட பேரவைத் தேர்தலில் அதிமுக.வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது.

தமிழகத்தில் பாஜக உத்வேகத்துடன் வளர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களில் 33 லட்சம் புதியஉறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஒருமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அதற்கு ஏற்ப தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்து வருகிறது.

தமிழகத்தில் எப்போது தேர்தல்வந்தாலும் அதை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு பலகருத்துகள் இருந்தாலும், தேர்தலை சந்திக்கும் போது அதில் இறுதிமுடிவு கிடைக்கும். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் இல்லை.

ஆந்திராவில் தமிழக கூலித்தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மிகப்பெரிய கடத்தல் கும்பல்களும், அவர்களுக்கு பின்னால் இருக்கக் கூடிய கடத்தல் பேர்வழிகளையும் தப்பிக்க வைக்கவே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.

மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதாக கூறப்படும் கருத்துகள் அனைத்துமே உருவாக்கப்படுபவை. மோடி அரசு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்புடன் இருக்கிறது. நிலம் கையக படுத்துதல் மசோதா என்பது மக்களுக்கு எதிரானது அல்ல.

அரசின் பயன்பாட்டுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பயன் படும் வகையில் தரிசு நிலங்களையும், புறம் போக்கு நிலங்களையும் பெறும் திட்டம்தான் அது.

இந்ததிட்டம் எந்த வகையிலும் தனியாருக்கு துணைபோகாது. விவசாயிகளின் ஒப்புதலுடன் அவர்களது நிலங்களை பெறவும், அவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு கொடுக்கவும், வேறுவகையில் விவசாய உற்பத்தியை பெருக்கவும் இத்திட்டத்தில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

உணவுப்பழக்கம் என்பது தனிநபர் உரிமை. ஆனால் பசுக்களை கொல்வது என்பது பொருளாதார வளர்ச்சிக்கும், விவசாயத்துக்கும் பெரும்தடை யாக இருக்கும். அதன் காரணமாகவே மகாராஷ்டிராவில் மாட்டி றைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஒரு போதும் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்காது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...