சத்தீஸ்கர் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் , அங்கு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது மாணவ, மாணவிகள் கேட்டகேள்விகளுக்கு மோடி சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.
18 மணி நேரம் பணியாற்றியதால் ஏற்படும் மனச் சோர்வை எப்படி போக்குகிறீர்கள் என்று மாணவர்கள் கேட்ட கேள்விக்கு மோடி, "125 கோடி இந்தியர்களும் எனது குடும்பத்தினராக நினைக்கிறேன். அவர்களுக்காகப் பணியாற்றுவதால் எப்போதும் சோர்வடைந்ததில்லை" என்றார்.
நீங்கள் உங்களது பள்ளிப் பாடங்களை முடித்ததும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்ந்ததில்லையா? அதுபோலத்தான் நானும் எனது பணியை முடித்ததும் மகிழ்ச்சியை மட்டுமே உணர்ந்துள்ளேன். சோர்வை அல்ல என்றார்.
மேலும், மோடி ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், எப்போதுமே வாழ்க்கையை வெற்றி தோல்வியை வைத்து எடைபோடாதீர்கள். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். சாதனை படைத்த அனைவருமே தோல்வியில் இருந்து பாடம் கற்றவர்களாகவே இருப்பார்கள். எப்போதும் உங்கள் லட்சியத்தை நோக்கி செயல்படுங்கள், ஒவ்வொருவரும் அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து அதிகம் கற்றுகொள்ள வேண்டும் அனுபவமே மனிதனை முழுமையாக்கு வதாகும். என்று அவர் கூறினார்.
நீங்கள் அரசியல்வாதியாக ஆகாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று மாணவர் ஒருவர் எழுப்பியகேள்விக்கு, நான் அரசியல்வாதியாக இருக்காவிட்டால், நான் சிறுவனாக இருக்கவே விரும்புகிறேன். வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான பருவம் சிறார் பருவம் தான் என்றார் மோடி.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.