பேஸ் மேக்கர், மூட்டுசிகிச்சை கருவி மற்றும் செயற்கை வால்வுகள் ஆகியவற்றையும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் (டிபிசிஓ) திட்டத்தின் கீழ் கொண்டுவந்து, மருந்து மாஃபியாக்களின் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாக மத்திய உரம் மற்றும் மருந்துத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார்.
கொச்சியில் நடந்த மோடி அரசின் முதலாமாண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த் குமார் மேலும் கூறியதாவது: மருந்து மாஃபியாக்கள், அத்தியாவசிய மருந்துபொருட்கள், உபகரணங்களின் விலையை இஷ்டத்துக்கு ஏற்றி செய்து வரும் அட்டூழிகளை அடக்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளது. அரசு தனது நடவடிக்கையை தொடங்கிவிட்டது.
இதய நோயாளிகள் பயன் படுத்தும் பேஸ்மேக்கர்கள், செயற்கை வால்வு மற்றும் மூட்டு அறுவையின் போது உள்ளே வைக்கப்படும் உபகரணங்கள் ஆகியவற்றின் விலையை கட்டுப் படுத்தும் நோக்கில் இவற்றை மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் திட்டத்தின் கீழ் கொண்டுவர உள்ளோம். ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களைகூட, ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை விலை வைத்து விற்பனைசெய்ய இந்த மாஃபியாக்களால் முடிகிறது. இதற்கு அரசு முடிவுகட்டும். நாடுமுழுவதும் மலிவு விலை மருந்தகங்கள் கொண்டுவரப்படும். இவ்வாறு அனந்த் குமார் தெரிவித்தார்.
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.