யோகா என்பது சாதி, மத, இனம்சார்ந்தது அல்ல. சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வது கட்டாயமும் அல்ல என மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
வரும் 21ம் தேதி சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு நாடுமுழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அரசு பள்ளிகளில் யோகா மற்றும் சூரிய நமஸ் காரத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறாக அரசுப்பள்ளி மாணவர்களிடம் சூரிய வணக்கத்தை கட்டாயப்படுத்தி திணிக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என முஸ்லிம் மத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து தனது கருத்தை பதிவுசெய்துள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "யோகா என்பது சாதி, மத, இனம்சார்ந்தது அல்ல. சர்வதேச யோகா தினத்தன்று யோகாசெய்வதும் கட்டாயமும் அல்ல" என விளக்கமளித்துள்ளார்.
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.