இந்தியாவில் 1975ல் கொண்டு வரப்பட்ட அவசரநிலையை கண்டித்து அதன் 40 ஆண்டு நிறைவையொட்டி பாஜக சார்பில் தாம்பரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பாஜக. மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
காங்கிரஸ் ஆட்சியில் 1975–ல் இந்திரா காந்தி இந்தியா முழுவதும் அவசர நிலையை கொண்டு வந்தார். அவசர நிலை இந்தியாவில் கறுப்புநாட்களாக உள்ளது. அவசர நிலையில் இந்தியாவில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைகுறித்து இன்றைய இளைய சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அவசர நிலையின் போது பிரதமர் நரேந்திர மோடி தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். அப்போது அவசர நிலையால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அவசரநிலை காரணமான ஆர்எஸ்எஸ். இயக்கத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பலர் வேலைகளையும் தொழிலையும் இழந்தனர்.
டெல்லியில் ஏராளமான கட்டிடங்கள் சஞ்சய்காந்தியால் இடித்து தள்ளப்பட்டது கட்டாய குடும்பகட்டுபாடு சட்டத்தை கொண்டுவந்து மக்களை கொடுமை படுத்தினர். இதற்கெல்லாம் எதிராக இந்தியா முழுவதும் பொதுமக்கள் போராடி அவசரகால நிலை முடிவுக்கு வந்தபின் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை அளித்தனர். இதில் காங்கிரஸ் உபி, பீகார் போன்ற மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தோல்வியுற்றது.
அப்போது இந்தியா என்றாலே இந்திரா என காங்கிரஸ் கட்சியினர் சொல்லிவந்தனர். இன்றைக்கு இந்தியா என்றால் இங்கு இருப்பவர்கள்தான் என்ற நிலை உள்ளது.
இந்திரா காந்தி காலத்தில் மூத்த காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிக்கபட்டு ஒரு நபர் ஆதிக்கம் இருந்தது அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை இன்றைக்கும் அந்த கட்சியில் சோனியா காந்தி அதற்குபின்பு ராகுல் காந்தி என்ற நிலைதான் உள்ளது.
நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்களின் ஆதரவோடு திட்டங்கள் நிறைவேற்றபட்டு வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரமுடியும். பாஜக. தொண்டர்கள் அதற்காக பாடுபடவேண்டும் என்று அவர் பேசினார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.