ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இரண்டு சாட்டிலைட் துறை முகங்களை அமைக்க மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டிவருகிறது. நேரடியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிசெய்ய பல வசதிகளை வழங்கும் இந்த சாட்டிலைட் துறை முகங்களை உருவாக்க 300 ஏக்கர்கள் நிலம்தேவை. ஏற்கனவே, காஷ்மீர் மாநிலத்தில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலை திட்டங்களை செயல் படுத்த உள்ள மத்திய அரசு அங்கு ரூ.600 கோடி செலவில் நெடுஞ்சாலைகளில் சாலையோர வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது .
இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது; நான் ஏற்கனவே காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் ஜியிடம் சொல்லியிருக்கிறேன். ஜம்முகாஷ்மீருக்கு 2 சாட்டிலைட் துறை முகங்களை வழங்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை, நதிகள் மற்றும் ரெயில் போக்கு வரத்து வசதிகளை அருகாமையில் கொண்டுள்ள இரண்டு இடங்களை தேர்வு செய்யுமாறு ஏற்கனவே காஷ்மீர் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்தபடி மத்திய அரசு அங்கு அடிப்படைகட்டமைப்பு வசதிகள், நெடுஞ்சாலை திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளை பெருக்க திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் பொருளா தாரத்தையும் உயர்த்த மத்திய அரசு அதிக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதே போல், நெடுஞ் சாலைகளில் சாலையோரங்களில் பெட்ரோல் பல்குகள், ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பெவிலியன்கள், சுற்றுலாபயணிகளை கவரும் கைவினை பொருட்கள், பழக்கடைகளை அமைக்க 50 ஏக்கர்கள் நிலத்தை காஷ்மீர் அரசு ஒதுக்கியுள்ளது.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் தால் ஏரி உட்பட காஷ்மீரின் பலஏரிகளில் சரக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த காஷ்மீர் அரசு முன்வரவேண்டும். நான் கடந்தமுறை இங்கு வந்தபோது ஆறு மற்றும் ஏரிகளில் மணல் தேங்கி இருப்பதை அறிந்து கொண்டேன். இதனால் தான் மழைபெய்த பிறகு வெள்ளம் ஏற்படுகிறது. ஆறுகளை தூர்வார ஏற்கனவே மாநில அரசிடம் ஆலோசனை நடத்தப் பட்டுள்ளது. ஏரிகளை ஆழப்படுத்துவதால் வெள்ளஅபாயம் குறையும். நாம் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து பாதைகளை மேம்படுத்தி வருகிறோம். ஆறுகளை தூர் வாரி அவற்றை ஆழப்படுத்தி ஆறுகள் மற்றும் ஏரிகளை போக்குவரத்திற்காக பயன்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்க்கொண்டு வருகிறது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.