தேசிய நதி நீர் இணைப்பு திட்டத்தின் கீழ் பீகார், அசாம், மேற்கு வங்கத்தில் நதிகளை இணைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
அசாம், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் உள்ள மானஸ், தீஸ்தா, சங்கோஸ், கங்கா ஆகிய நதிகளை இணைக்க மத்தியஅரசு தீவிரமாக பரிலீசித்து வருகிறது.
இந்ததிட்டம் நிறைவேற்றப்பட்டால் பாசனத்திற்கு மட்டுமின்றி, குடி நீர் தட்டுப்பாடும் நீங்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 1999 முதல் 2004 ம் ஆண்டுவரையில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது, மாநிலங்களில் உள்ள நதிகளை இணைப்பது குறித்து திட்டம் தயாரிக்கபட்டது.
அதன் ஒருகட்டமாக, கென்-பெத்வா நதிகளை இணைக்கும் பணிகள் விரைவில் தொடங்கபட உள்ளது. இந்நிலையில், மானஸ்,தீஸ்தா, சங்கோஸ், கங்கா உள்ளிட்ட நதிகளை இணைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதலை பெற்றபின்னர், இதற்கான நடவடிக்கை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.