மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (ஐஐஎம்) மாணவர்களிடையே, இறுதி மூச்சை சுவாசித்த தருணம்வரை அப்துல் கலாம் ஆற்றிய சொற்பொழிவு, புதிய புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.
"வாழத் தகுந்த பூமியை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் மாணவர்கள் முன் கடந்த திங்கள் கிழமை மாலையில் அப்துல் கலாம் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு திடீர்மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அந்த சொற்பொழிவை கலாம் முழுமையாக முடிக்க இயலாமல்போனது.
இதே தலைப்பில் அப்துல்கலாம் எழுதிவந்த புத்தகமும் தற்போது பாதியில் நிற்கிறது. எனினும், கலாமுடைய கடைசி சொற்பொழிவை இணைத்து அந்தப்புத்தகத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது உதவியாளர் ஸ்ரீஜன் பால்சிங் புதன்கிழமை கூறியதாவது:
"வாழத் தகுந்த பூமியை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதவேண்டும் என்பது அப்துல் கலாமின் நீண்ட கால எண்ணமாக இருந்தது. தான் நினைத்ததில் பாதியை கலாம் புத்தகமாக எழுதி விட்டார். மேலும் ஒரு பாதி முற்றுப்பெறாமல் உள்ளது.
எனினும், தற்போதுவரை அவர் என்ன எழுதியிருக்கிறாரோ அதை அப்படியே புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். அந்தப்புத்தகத்தில், ஐஐஎம் மாணவர்களிடையே கலாம் சொற்பொழிவு ஆற்றிய 4,000 வார்த்தைகளும் இடம்பெறும் என்றார்.
புத்தகத்தின் மையக்கருத்து: "வாழத்தகுந்த பூமியை உருவாக்குவோம்' என்ற புத்தகத்தில் பூமியின் உயிர் சுழற்சிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலாம் எழுதியிருக்கிறார்.
மாசுத்தடுப்பு, கழிவு மேலாண்மை, நீர்சேமிப்பு, மறுசுழற்சியில் எரி சக்தி, பசுமை கட்டடங்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் எழுதியுள்ளார்.
அப்துல் கலாமும், ஸ்ரீஜன்பால் சிங்கும் இணைந்து எழுதிய "முன்னேற்ற இந்தியா' என்ற புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.