இதை சாட்டையடி என்பதா? சவுக்கடி என்பதா? இல்லை நெத்தியடி என்பதா?

இதை சாட்டையடி என்பதா? சவுக்கடி என்பதா? இல்லை நெத்தியடி என்பதா? 'மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி.) தலைவராக ஏன் பி.ஜி.தாமஸை நியமனம் செய்தீர்கள்? அவரது பயோடேட்டாவை மட்டும் பார்த்துள்ளீர்கள். அதற்கு மேலும் நீங்கள் போய் இருக்க வேண்டும். அவரது நியமனம் செல்லாது. சட்டவிரோதமானதும் கூட' என்று மத்திய அரசை சுப்ரீம்கோர்ட் விளாசித் தள்ளிவிட்டது.

நீதிமன்றங்கள் இது-போன்ற தீர்ப்புகளை அளிக்கும்போது ஆஹா..அற்புதம்..அபாரம்.. என்றெல்லாம் உடனே வாய் திறந்து பாராட்டவும் மகிழ்ச்சி கொள்ளவும்தான் தோன்றுகிறது. ஆனால் இந்தியா என்ற நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி-களால் ஆளப்படும் ஜனநாயக நாடு. இங்கு நாடாளுமன்றம்தான் சரியாக செயல்பட வேண்டும். இறுதி முடிவுகள் இங்கேயே இறுதியாகிவிட வேண்டும். இதைத் தாண்டி கோர்ட்டுக்களுக்கு போகிறது என்றால் கோளாறுகளுடன் கூடிய நாடாளுமன்றத்தை இந்த நாடு பெற்றுள்ளதாக அர்த்தம்.

அரசியல்வாதிகளை யார்தான் தட்டிக் கேட்பது என்று மக்கள் கேட்கலாம். கோர்ட்டுகளாவது கேட்கிறதே அதையும் தவறு என்று கூறலாமா என்றும்கூட கேட்கலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்த அளவுக்கு கோர்ட்டுகள் தங்கள் கைகளில் எல்லாவற்றையுமே எடுத்துக் கொண்டு தாட் பூட் என்று போவது சரியா என்ற கேள்வி முக்கியம். ஸ்பெக்ட்ரமாகட்டும், காமன்வெல்த் போட்டி முறைகேடுகளாகட்டும், ஆதர்ஷ் ஊழல் ஆகட்டும் இந்த ஊழல் கண்காணிப்பு ஆணைய நியமனம் ஆகட்டும்… மன்மோகன்சிங் அரசின் தலையில் கோர்ட்டுகள் குட்டி குட்டி அதன் மண்டையே வீங்கிப்போய்க் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் கோர்ட்டுகளே முடிவு செய்யும் என்றால், நாடாளுமன்றமோ, பிரதமரோ, அரசு நிர்வாகமோ இந்த நாட்டுக்குத் தேவையே இல்லையே… அதிலும் நீதிபதிகள் அடிக்கும் கமென்ட்டுகளுக்கு அளவே இல்லை. டி.வி. மீடியாக்களும் அதையே காட்டி காட்டி நாள் முழுவதையும் ஓட்டுகின்றன.

ஆரம்பத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும். தாமஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என்பது. டெலிகாம் செக்ரட்ரியாக தாமஸ் நியமிக்கப்பட்ட போதே பிரச்னை வெடித்தது. அடிக்கடி சீஸரின் மனைவியை மேற்கோள் காட்டும் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தாமஸ் மட்டும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக தெரிந்துள்ளது விந்தையான விஷயமாக படுகிறது. பத்திரிகைககள் படிக்கும் பழக்கம் பிரதமரிடம் இல்லாமல் இருந்தாலுமே கூட, அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் கிளப்பிய எதிர்ப்பின்போதாவது தாமஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ள மெனக்கெட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல்போனதன் விளைவு, சுப்ரீம் கோர்ட்டில் பல மாதங்களாக வழக்கு நடைபெற்று நீதிபதிகள் காரசாரமாக திட்டித் தீர்த்த பிறகு தெரிந்துள்ளது, தாமஸ் நியமனம் தவறு என்பது!

தாமஸ் ஒன்றும் தங்கமல்ல. ஆனாலும் அவர் சொக்கத் தங்கத்தின் ஆள் என்றே கூறப்படுகிறது. தாமஸ் நியமனத்தின் ரகசியத்தை தோண்ட ஆரம்பித்தால் கேரள கத்தோலிக்க கிறிஸ்தவ சபைகளின் ஆதிக்கம் இந்த நாட்டின் பல்வேறு அதிகார மட்டங்களில் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கின்றன என்ற கிசுகிசுக்களும் உடன்சேர்ந்து வருகின்றன. இந்த தாமஸ் நியமனம் என்பதே கூட வாடிகனில் இருந்தே வந்த சிபாரிசு என்பதும், மும்பையில் உள்ள சக்திவாய்ந்த கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் முக்கிய நிர்வாகி மூலமாக இது நடந்தது என்பதும் வட இந்திய மீடியாக்களின் உள்வட்டாரங்களில் உலாவரும் தகவல்.

அதுமட்டுமல்ல, கேரளாவில் தற்போது சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கப்போகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அங்கு கிடைத்த கிறிஸ்தவர்களின் அபரிமித ஆதரவை இம்முறை சட்டமன்றத் தேர்தலிலும் பெற்றாக வேண்டுமென்ற கட்டாயம். தாமஸ் நியமனத்தை மாற்றுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்களும் கால நேரங்களும் இருந்தபோதிலும் அது நடைபெறாமல் போனதற்கும், கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்த போதிலும் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்று பிடிவாதமாக தாமஸ் தைரியம் காட்டியதற்கும் இவை-யெல்லாம்தான் பின்னணி என்பது திரைமறைவு தகவல்-களாகவே இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிக்கை படிக்கிறார். ''தாமஸ் நியமன விஷயத்தில் ணிக்ஷீக்ஷீஷீக்ஷீ ஷீயீ யிuபீரீமீனீமீஸீt நிகழ்ந்துவிட்டது. இதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்'' என்று. ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக கேள்வி எழுந்தபோது, ராஜா மீண்டும் அமைச்சர் ஆனதற்கு தான் பொறுப்பல்ல, ராஜா பெயரை பரிந்துரைத்தது கலைஞர்தான். கூட்டணி தர்மத்திற்காக அவரை அமைச்சராக ஏற்றுக் கொண்டேன் என்றார். இவ்விஷயத்தில் பழியை தூக்கி பிறர் மீது போட முடியாது என நினைத்த பிரதமர் முதல்நாள் ''நானே பொறுப்பேற்கிறேன்'' என்றார். தாமஸ் தேர்வு என்பது முழுக்க முழுக்க அவரது நேரடி கண்காணிப்பில் நடந்த நியமனம் என்பதால் பழியை சுமத்த இன்னொரு கலைஞர் அவருக்கு கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் இருப்பதால்தான் பொறுப்பேற்கிறார் என்று பார்த்தால், அடுத்தநாளே பழியை பிறர் மீது போட்டுவிட்டார். எப்படி?

''தாமஸ் மீது குற்றச்சாட்டு உள்ளது என்பது எனக்கு தெரியவே தெரியாது. அவரது பெயரை என்னிடம் அளித்தது பணியாளர் நலத்துறை அமைச்சகம்தான்'' என்று கதையை திருப்பினார்.

தப்பான ஆளான தாமஸை மன்மோகனுக்கு கை காட்டிவிட்டு தற்போது மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வீற்றிருக்கிறார் பிரீத்திவ் ராஜ் சவாண். மன்மோகன் தன்னை மாட்டிவிட பார்க்கிறார் என்று தெரிந்தவுடன், ''தாமஸ் கேரளாவின் தலைமைச் செயலாளராக எல்லாம் பணிபுரிந்துள்ளார். பிறகு மத்திய அரசு பணிக்கு வந்தும் பணியாற்றியுள்ளார். எனவே அவரை நம்பினோம்'', என்று தன்பங்கிற்கு தட்டிக் கழித்து பழியை தூக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது போட்டுள்ளார். இனி காம்ரேடுகள் என்ன கதை விடுவார்களோ தெரியாது.

ஒன்று மட்டும் உண்மை. சுதந்திரத்திற்கு பிறகு பல பிரதமர்கள் பல நியமனங்களைச் செய்துள்ளனர். ஆனால் முதன்-முறையாக ஒரு பிரதமர் போட்ட நேரடி நியமனம் ரத்து செய்யப்பட்டதும்; சட்டவிரோதம் என்று கூறப்பட்டதும் இதுதான் முதன்முறை. இந்த பெருமையை பெற்றுள்ளார் மன்மோகன்சிங். இவரிடம் 'பொறுப்பேற்கிறேன்' என்ற வசனத்தை மட்டுமே நாட்டு மக்கள் பெற முடியும். நடந்த, செய்த குற்றத்திற்கு என்ன பரிகாரம் என்று யாரும் கேட்க கூடாது. காரணம் மன்மோகன்சிங் ஒன்றும் லால்பகதூர் சாஸ்திரி அல்ல!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற ...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் திமுக -வினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர் – அண்ணாமலை புகார் தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து ...

உர மானிய திட்டம் – மத்திய அமைச ...

உர மானிய திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் விவசாயிகளுக்கு பெரும் பலனளிக்கும் வகையில், டி.ஏ.பி., எனப்படும் டை ...

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் ...

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் ஆலோசனை தோஹா, கத்தாரின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான ஷேக் ...

விவசாயிகளின் நலனை மோடி மேம்படு ...

விவசாயிகளின் நலனை மோடி மேம்படுத்துவதில் பாஜக அரசு முழு ஈடுபாட்டுடன் உள்ளது – பிரதமர் மோடி '' விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் பா.ஜ., அரசு முழு ...

2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும ...

2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் – ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக ...

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ...

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் சென்றது? அண்ணாமலை கேள்வி 'கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...