உலகின் மிகவும் அதிக செல்வாக்கு கொண்ட 50 முக்கிய பிரமுகர்களின் தர வரிசை பட்டியலை உலகின் பிரபல நிதி மற்றும் வர்த்தகசெய்திகளை வெளியிட்டுவரும் 'ப்ளூம்பர்க்' நிறுவனம் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.
அவ்வகையில், இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள புதியபட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் 13-வது இடத்தில் மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகால இந்தியதேர்தல் வரலாற்றில் இல்லாத வகையில் மாபெரும் வெற்றியை பெற்ற மோடி, கடும் எதிர்ப்புக்கு இடையிலும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான பலசீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இதன் மூலம் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இந்த ஆண்டு சீனாவை விட மிகவும் வேகமாக வளர்ச்சி அடையும் எனவும் ப்ளூம்பர்க் குறிப்பிட்டுள்ளது.
இந்தபட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜேனட்எல்லன் உள்ளார். அடுத்த இரண்டாவது இடத்தில் சீன அதிபர் க்ஸி ஜின் பிங், மூன்றாவது இடத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஒன்பதாவது இடத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மார்க் கெல் மற்றும் பதிமூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் உள்ளனர்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.