பாஜக சார்பில் 5 பேர் கொண்டகுழு தூத்துக் குடியில் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் என்று தமிழிசை சவுந்த ராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கலவரம்வரும் என்பதை போலீசார் முன் கூட்டியே அறிந்து தடுக்க தவறி விட்டதாகவும் இதில் உளவுத் துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் தமிழிசை சவுந்தர ராஜன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும் போராட்டத்தை தூண்டும் அமைப்புகள், இயக்கங்களை கண்டறிந்து ஒடுக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் இது மாதிரி கலவரம் வெடிக்கும் என்றும் அவர் கண்டனமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாஜக சார்பில் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறினார். இந்தபயணத்தில் 5 பேர் கொண்ட குழுவுடன் தாம் தூத்துக்குடி செல்ல இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், வேதாந்தா குழுமநிறுவன அதிகாரிகள் தன்னை சந்திக்க நேரம்கேட்டதாகவும், ஆனால் தான் நேரம் தர மறுத்து விட்டதாகவும் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஸ்டாலின், திருநாவுக்கரசர் தங்கள் மீது கூறும் குற்றச் சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்க தான் தயாராக உள்ளதாக தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.