வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள ஒட்டு மொத்த கருப்பு பணத்தையும் வகுத்தால், அது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 லட்சம் என்றளவில் இருக்கும் என்ற கருத்தையே கடந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தனது பிரசாரத்தில் முன்வைத்தார்.
அந்தப்பணத்தை மக்கள் நல பணிக்களுக்காக செலவிடமுடியும் என்பதே அவர் கூறியதன் அர்த்தமாகும். மக்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.15 லட்சம் நேரடியாக செலுத்தப்படும் என்பது அதற்கு அர்த்தமல்ல.
பொதுக் கூட்டங்களில் தலைவர்கள் பேசும் போது சிலநேரங்களில் உணர்ச்சிவசப் படுவார்கள். எனவே, அவர்களின் பேச்சுக்களுக்கு அப்படியே நேரடிஅர்த்தம் கொள்ளக்கூடாது. மேலும், அரசு கருவூலத்தில் இருந்து மக்களின் வங்கி கணக்குகளில் எப்படி பணம்செலுத்த முடியும்?
உத்தரப் பிரதேச மாநில போலீஸாரின் ஒரு தலைப் பட்சமான செயல் பாடுகளின் காரணமாகவே, தாத்ரி சம்பவம் நிகழ்ந்தது. போலீஸார் மதப்பாகுபாடுகள் இன்றி செயல் பட்டிருந்தால், இத்தகைய சம்பவங்கள் நிகழாது. மேலும், தாத்ரி சம்பவத்தில் உத்தர பிரதேச அரசைக் குற்றம்சாட்டுவதற்கு ஊடகங்களுக்கு தைரியமில்லை.
தாத்ரி படுகொலை குறித்து கருத்துதெரிவித்த பிறகும், எழுத்தாளர்கள் சாகித்ய அகாதெமி விருதுகளைத் திருப்பியளித்து வருகின்றனர். கடந்த மக்களவை தேர்தலில் பெரும்பாலான எழுத்தாளர்கள், மோடி ஆட்சிக்கு வரக் கூடாது என்று பிரசாரம் செய்தனர். அதையும் மீறி, மக்கள் எங்களைத் தேர்ந்தெடுத்தனர்.
பீகாரில் வென்றால் யாருக்கு முதல்வர்பதவி என்பது குறித்து பாஜக இது வரை தனது கூட்டணிகளுக்கு யாரையும் சுட்டிக் காட்டவில்லை’ . ‘மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலத்திலும் முதல்வர் வேட்பாளர் அறிவிக்காமல் வெற்றிபெற்று, பின்னர் முதல்வரை தேர்வு செய்தோம்’ .
‘பீகாரில் நல்ல அனுபவம்வாய்ந்த தலைவர்கள் எங்களிடம் உள்ளனர். அதனால் அங்கு நல்லாட்சி தரமுடியும். பீகார் மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி யிருப்பதை மறைப்பதற்காக, மாட்டிறைச்சி விவகாரத்தை பெரிதாக்கி இருக்கிறார் லாலு’
"இந்தியா டிவி' என்ற செய்தி தொலைக் காட்சிக்கு சனிக்கிழமை அளித்த நேர்காணலில் அமித் ஷா கூறியது:
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.