கடந்த வெள்ளிக் கிழமை கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற தொழில் நுட்ப மாநாட்டில் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசிய தாவது: இளைஞர்களின் கனவை நனவாக்கும் வாய்ப்புகளை மத்தியஅரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தொழில் முனைவுச் செயல் பாட்டையும் முதலீட்டையும் ஊக்கப்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒரேவிதமான வெளிப்படைத் தன்மையில் செயல்படவில்லை. சில மாநிலங்கள் அதன் கடந்த காலத்தை இன்னும் பற்றிக் கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களும் மத்தியஅரசுடன் இணைந்து செயல்பட்டால், தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளின் பட்டியலில் 63-வது இடத்திலிருந்து 1-வது இடத்துக்கு முன்னேறும்.
தொழில்நுட்பங்கள் மூலம் சாமானியமக்களின் வாழ்வை மாற்றி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை பிரதமர் மோடி கொண்டுள்ளார். இன்று மத்திய அரசு மானியம் இடைத்தரகரின் கைகளுக்குச் செல்லாமல் நேரடியாக மக்களின் கைகளுக்கு செல்கிறது. தொழில் நுட்பம் சாமானிய மக்களின் வாழ்க்கையை எப்படி மாற்றிஅமைக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |