பங்கிங்காம் அரண்மனையில் பிரதமருக்கு சிறப்புவிருந்து

 பிரதமர் நரேந்திரமோடி அடுத்தமாதம் (நவம்பர்) 12, 13, 14–ந்தேதிகளில் 3 நாள் பயணமாக இங்கிலாந்து செல்கிறார்.

12–ந்தேதி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை, பிரதமர் மோடி சந்தித்துபேசுகிறார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்த சந்திப்பு லண்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

அந்தசந்திப்பு முடிந்ததும் இருவரும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை அருகே நடந்தபடி பேச்சு நடத்துவார்கள். அதன் பிறகு பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பாராளுமன்ற சபா நாயகர் சிறப்பான வர வேற்பு கொடுக்க உள்ளார். அப்போது இங்கிலாந்து எம்.பி.க்கள், இந்திய வம்சா வழி எம்.பி.க்களுடன் மோடி பேசவுள்ளார்.

மறுநாள் 13–ந்தேதி மதியம் லண்டனில் உள்ள பங்கிங்காம் அரண்மனைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு ராணி இரண்டாம் எலிசபெத் விருந்து அளிக்க உள்ளார். இந்த சிறப்புவிருந்துக்காக இப்போதே தடபுடல் ஏற்பாடுகள் செய்ய தொடங்கி உள்ளனர்.

இந்தவிருந்து முடிந்ததும் எலிசபெத் ராணியுடன் மோடி சிறிதுநேரம் பேச்சு நடத்துவார். இருவரும் நினைவுப் பரிசுகளை பரிமாறி கொள்வார்கள். இந்தசந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பங்கிங்காம் அரண்மனையில் விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் வெம்பளி ஸ்டேடியத்துக்கு செல்வார். அங்கு பிரமாண்டகூட்டம் நடைபெற உள்ளது. இந்தகூட்டத்தில் பங்கேற்க சுமார் 60 ஆயிரம்பேர் தங்கள் பெயர்களை ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டுக் காரர்களும் மோடி பேச்சைகேட்க திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஸ்டேடியத்துக்கு மோடி வரும்போது ஒலிம்பிக் போட்டி ஸ்டைலில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

14–ந்தேதி வடக்கு லண்டனில் உள்ள அம்பேத்கார் வசித்த வீட்டுக்கு பிரதமர் செல்ல உள்ளார். அம்பேத்கார் நினைவிடத்தை அவர் திறந்துவைப்பார். பிறகு 12–ம் நூற்றாண்டு தத்துவஞானி பரவேஸ்வராவின் சிலையையும் பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...