தனது புது கொள்கையின்படி ராஜீவ் காந்தியை குற்றவாளியாக பிரதமர் மன்மோகன் சிங் சித்திரித்துள்ளார்

தனது புது கொள்கையின்படி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை குற்றவாளியாக பிரதமர் மன்மோகன் சிங் சித்திரித்துள்ளார் என பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

2008 நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு சாதகமாக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், குற்றச்சாட்டு

எழுப்பியவர்களை அடுத்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றார்.

இது குறித்து தனது வலைப்பூவில் (இணையதள பிளாக்) அத்வானி குறிப்பிட்டுள்ளதாவது:

தேர்தலுக்கு முன் குற்றம் இழைத்தவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்தக் குற்றத்தில் இருந்து அவர் விடுபட்டவராக எப்போதிலிருந்து கருதப்படுகிறது?

பிரதமர் கூறிய இதுபோன்ற அபத்தமான கொள்கை எப்படிப்பட்ட மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்துள்ளரா?

1989 தேர்தலுக்கு முன், போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ராஜீவ் காந்தி மீது குற்றம்சாட்டப்பட்டது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

பிரதமர் மன்மோகன் சிங்கின் புதிய கொள்கைப்படி, போபர்ஸ் விவகாரத்தில் ராஜீவ் காந்தி குற்றவாளி என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர் என பொருள் கொள்ளலாம் என்பதை அவர் உணர்ந்துள்ளாரா?

இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளது அந்த விவகாரத்தை மூடி மறைக்கும் செயலாகும்.

பாகிஸ்தான் விஷயத்தில் தனது அரசிலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டது விக்கிலீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது.

பயங்கரவாதம் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்கள் கருத்தை மதிப்பீடு செய்தால் மக்களிடம் இருந்தும் அவர் தனிமைப்பட்டுள்ளது தெரியவரும் என்று அத்வானி தெரிவித்துள்ளார்

{qtube vid:=aYIxgQyGzwU}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...