என்ன ஆச்சரியமா இருக்கா? இவ ஏதோ கதைவிடுறா, எங்கேயாவது மீன் நூறு வருடங்களுக்கு வாழ முடியுமான்னு நினைக்குறீங்களா?
உங்களுக்கெல்லாம் 'கெண்டை' மீன் பத்தி தெரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். அதுல ஒருவகை தான் இந்த 'சாதாக் கெண்டை' (இச்ஙுஙுச்ஙூ இஹசுசி). இந்த மீன், உலகம் முழுவதும் வளர்க்கப்படுது. இதோட உலக உற்பத்தி, வருடத்துக்கு சுமார் 27
லட்சம் டன்கள். சீக்கிரத்துலேயே இனமுதிர்ச்சி பெற்று, தானாகவே இனப்பெருக்கமும் செய்ற இந்த சாதாக்கெண்டையை, தூண்டல் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்ய வைக்க முடியுமாம். எல்லா வகையான உணவுப் பொருட்களையும் இது சாப்பிடும். அதேமாதிரி, நீரிலுள்ள சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி தன்னையும் மாத்திக்கிட்டு வாழும்.
இந்த மீனோட தலையை வெட்டி எடுத்தாலும், கொஞ்ச நேரத்துக்கு இதால செயல்பட முடியும். ஏறக்குறைய நூறு வருடங்கள் வரை உயிர் வாழும் வல்லமை படைத்தது இந்த மீன்கள். இதன் உள்ளினங்களில் ஒன்றான 'சிப்ரினஸ் கார்ப்பியோ'வுக்கு செதிள்கள் கிடையாது. அதனால் அந்த மீனை 'தோல் கெண்டை' அப்படின்னு அழைக்கிறாங்க.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.