புததம் தான் எதிர்காலம் யுத்தம் அல்ல- பிரதமர் மோடி

“இந்தியா சொல்வதை கேட்க உலகமே தயாராக இருக்கிறது. நம் நாட்டின் பாரம்பரியம் காரணமாக, ‘யுத்தம் எதிர்காலம் அல்ல; புத்தம் தான் எதிர்காலம்’ என்பதை சர்வதேச சமூகத்திடம் நம்மால் வலியுறுத்த முடிகிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடுவாழ் புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக, ‘பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு’ ஆண்டுதோறும் நடக்கிறது. இதன், 18வது மாநாடு ஒடிசாவின் புவனேஸ்வரில் நேற்று முன்தினம் துவங்கி இன்று வரை நடக்கிறது.

இந்த மூன்று நாள் மாநாட்டில், 50 நாடுகளில் இருந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்று உள்ளனர். நேற்று நடந்த இரண்டாம் நாள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

புலம்பெயர்ந்தோரை, அவர்கள் வாழும் நாடுகளுக்கான இந்தியாவின் துாதர்களாகவே எப்போதும் கருதுகிறேன். நமக்கு பன்முகத்தன்மையை கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், நம் வாழ்க்கையே பன்முகத்தன்மையில் தான் இயங்குகிறது. அதனால்தான், இந்தி யர்கள் எங்கு சென்றாலும், அந்த குறிப்பிட்ட நாட்டின், சமூகத்தின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றனர். அந்த நாட்டின் விதிகள் மற்றும் மரபுகளை நாம் மதிக்கிறோம்.

அந்த நாட்டிற்கும், அதன் சமூகத்திற்கும் நேர்மையாக சேவை செய்கிறோம். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கிறோம். அதே நேரத்தில் நம் இதயம், இந்தியாவை நினைத்தே துடித்துக் கொண்டிருக்கும்.

புலம்பெயர்ந்த இந்தி யர்களால், நான் எந்த நாட்டிற்கு சென்றாலும் தலை நிமிர்ந்து செல்கிறேன். உலகம் முழுதும், உங்களிடம் இருந்து நான் பெற்ற அன்பு, பாசம், கவுரவத்தை நான் மறக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில், உலகம் முழுதும் பல்வேறு தலைவர்களை நான் சந்தித்துள்ளேன். அங்கு வசிக்கும் இந்தியர்களை உலகத் தலைவர்கள் பாராட்டுகின்றனர். அவர்களின் சமூகத்திற்கு நீங்கள் சேர்க்கும் சமூக மதிப்பீடுகளே இதற்குக் காரணம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

புததம் தான் எதிர்காலம் யுத்தம் ...

புததம் தான் எதிர்காலம் யுத்தம் அல்ல- பிரதமர் மோடி “இந்தியா சொல்வதை கேட்க உலகமே தயாராக இருக்கிறது. நம் ...

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண் ...

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் – பிரதமர் மோடி '' நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்,'' எனப் பிரதமர் ...

இதயத்தைக் கவர்ந்தது இந்தியா-அம ...

இதயத்தைக் கவர்ந்தது இந்தியா-அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ''இந்தியா என் இதயத்தைக் கவர்ந்துள்ளது,'' என்று அமெரிக்க துாதர் ...

இந்தியா திறமையான இளைஞர்களை கொண ...

இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு- பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா திறமையான இளைஞர்களை கொண்ட நாடு. 2047ம் ஆண்டுக்குள் ...

பாலியல் வழக்குகளில் குற்றவாளி ...

பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளை காப்பாற்றும் திமுக அரசு- அண்ணாமலை குற்றச்சாட்டு பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்கள் அடையாளங்களை வெளிப்படுத்தி, குற்றவாளிகளை காப்பாற்றுவதாக, ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன ...

இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணனுக்கு தமிழக பா.ஜ., தலைவர் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...