பிரதமர் பழங்குடியின வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக ஒருலட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய்க்கான முதல் தவணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி. ”அரசின் நலத் திட்டங்கள் அனைவரையும் சென்ற டைந்தால் மட்டுமே நாடு முன்னேற்றபாதையில் செல்லும்” என கூறினார்.
பழங்குடியின மக்களின் சமூகபொருளாதார நிலையை உயர்த்துவதற்காக பிரதமர் பழங்குடியின நலத்திட்டம் துவங்கப்பட்டது. பாதுகாப்பான வீடுகள் சுத்தமான குடி நீர் மற்றும் சுகாதாரம் சிறப்பான கல்வி ஆரோக்கியம் மற்றும் ஊட்ட சத்து மின்சாரம் சாலை மற்றும் தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்காக 24,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நாட்டின் தொலைதுார பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வீடுகட்டுவதற்கான நிதி அளிக்கப்படுகிறது.
முதல் தவணையாக ஒரு லட்சம் பேருக்கு 540 கோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி நேற்றுஅளித்தார். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியதாவது: என்னுடைய 10 ஆண்டு கால ஆட்சி ஏழைகளுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டுள்ளது. பட்டியலின பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டத்துக்கான நிதி ஐந்துமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பழங்குடியின மாண வர்களின் கல்விக்கான நிதி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டரை மடங்கு உயர்ந்துள்ளது. பழங்குடியின மக்களுக்கு தரமானகல்வி வழங்குவதற்காக துவக்கப்பட்ட ஏகலைவா மாதிரி பள்ளிகளின் எண்ணிக்கையை 90ல் இருந்து 500 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பழங்குடியின மக்களில் மிகவும் பின் தங்கிய மக்கள் அரசின் ஒவ்வொரு நலதிட்டத்திலும் முழுமையான பலனை அடைவதை உறுதி செய்ய இந்த அரசு தீவிரமாக உள்ளது. பழங்குடியின மக்களுக்கான நலதிட்டங்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பேசியுள்ளேன்.
அதே சமூகத்தில் இருந்துவரும் அவர் நடைமுறையில் உள்ள சிக்கல்களை தெளிவாக எடுத்துரைத்தார். அதன் அடிப்படையிலேயே திட்டம் வகுக்கப்பட்டது. உங்களுக்காக நான்குகோடி வீடுகளை இந்த அரசு கட்டித்தர உள்ளது. முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட உங்களை அடையாளம் கண்டு உங்களுக்குதேவையான உதவிகளை செய்வதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது.
சொந்தவீடு கட்டிக் கொள்வதற்கான முதல் தவணை பெற்ற ஒருலட்சம் பயனாளர்கள் வீடுகளில் இன்றைக்குதான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கேற்றுக் கொள்கிறேன் என்றார்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |