ஊழல் மற்றும் கருப்புபண விவகாரங்களை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
துருக்கியின் அண்டாலியா நகரில் நடை பெற்று வரும் ஜி-20 கூட்டமைப்பின் இரண்டு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மேலும் அவர் பேசியதாவது.
'எனது அரசு ஊழல் மற்றும் கருப்புபணத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கணக்கில் வராதபணம் மற்றும் சொத்துகள் தொடர்பாக புதியசட்டம் இயற்றப்பட்டுள்ளது'.
வெளிநாடுகளில் பதுக்கப் பட்டுள்ள பணம் மற்றும் சொத்துகளை மீட்பதற்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்த விவரங்களை அளித்து உதவவேண்டும்.
அதிக மூலதன தேவைகள், வளரும் நாடுகளின் வங்கிசேவைகளை பாதிக்கக் கூடிய அளவில் இருக்கக் கூடாது. நவீன தொழில் நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் மூலதன தேவைகளை குறைக்க முடியும்.
இணைய பாதுகாப்பு முறையை மேம்படுத்துவது மூலமேதான் வங்கி செயல்பாடுகளை பாதுகாக்க முடியும்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய ஒதுக்கீடுகுறித்த சீர்திருத்தங்களில் அமெரிக்க அரசு கையெழுத்திட வேண்டும். சர்வதேச நாணயநிதியம் என்பது இடஒதுக்கீடு சார்ந்த நிறுவனமாக இருக்க வேண்டுமே தவிர கடன் வளங்களை சார்ந்திருக்க கூடாது. அமெரிக்காவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் ஒதுக்கீடுகுறித்த சீர்திருத்தங்கள் விரைவில் நிறை வேற்றப்பட வேண்டும் என்றார் மோடி.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.