பசுமைச் சுதந்திரம்

அதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது.

எரிபொருள்களால் காற்றில் மிதக்கவிடப்படும் Carbon dioxide சுற்றம் சூழலை மாசுபடுத்தாத

வகையில் மீண்டும் எரிபொருளாக மாற்றம் பெறும் புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகளான F. Jeffrey என்பவரும் William L. Kubic சர் என்பவரும் ஆதார பூர்வமாக நிருபித்துள்ளனர்.

காற்றில் மிதக்கும் Carbon dioxide Pottassium என்ற கரைசலுக்குள் ஊத்தப்படும்போது, Carbon dioxide உறிஞ்சப்பட்டு வேறு சில இரசாயனமாற்றங்களின்பின், எரிவாயுவாக மீண்டும் வடிவெடுப்பதைக் காணத்தவறவில்லை. அப்பாடா, ஒருவழியாக இன்றைய சமுதாயம் அனுபவித்த சுகங்களை, இளைய சந்ததியினரும் அனுபவிக்க இவ்வாராய்ச்சியின் பெறுபேறுகள் வாய்ப்பளிக்குமெனமூச்சு விடலாம்.

தீர்ந்துபோகும் நிலையில் இருக்கும் எண்ணெய்வளத்தை ஈடுசெய்ய, ஏராளமான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படும் சோளம்,கரும்பு, போன்ற தாவரங்களுக்கு பதிலாக எரிவாயுக்களின் மீட்புபணியை ஏற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கில் ஆலைகள் உதயமாகுமென நம்பலாம்.

இவ்வாலைகள் குறைந்தசெலவில் இயங்க வேண்டுமாயின், அணுசக்திக்கு மாறவேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்த கதையாக மாறாமல் இருந்தால், புதிய கண்டுபிடிப்பு நிச்சயம் பசுமைச் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும். நல்லவை நடக்க நாமும் காத்திருப்போம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...