ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் தென் சென்னை மக்களுக்கு தமிழிசை கடிதம் ஒன்றை அளித்தியுள்ளார் அதில்; நான் ஏன்ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக்கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்கவரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக்கேட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்துகொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு விளக்கமாக இதை பதிவு செய்கிறேன்.

நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 25 வருடங்கள் ஆகிறது. மாநிலச்செயலாளர், தேசிய செயலாளர் போன்ற உயர்பதவிகளை எனது கட்சியின் தலைமை வழங்கியது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநிலத்தலைவர் என்ற உயரிய பதவியையும் எனக்கு வழங்கியது. அதற்கு எல்லாம் மேலாக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியை மத்தியில் ஆளும் பாஜகஅரசு எனக்கு வழங்கியது. மேலும் என் தாய்மொழி தமிழ் மொழியில் பேசுகின்ற பாண்டிச்சேரி மாநிலத்திலேயே பணியாற்றுகின்ற வாய்ப்பையும் பாஜக அரசு எனக்கு வழங்கியது. தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இருமாநிலங்களை ஆளுகின்ற உயரிய ஆளுநர் பொறுப்பை எனக்கு ஒன்றிய அரசு வழங்கியது.

ஆளுநர் என்றாலே பெருமிதம்புகழ் அதிலும் இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்றால் சும்மாவா? அதற்கான மரியாதையும் மகுடமும் மிகவும் உயர்ந்தது அல்லவே. அதைபணிவோடு ஏற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வந்தேன். ஒருஆளுநராக முன் உதாரணமான பல சீரிய திட்டங்களை நான் செயல்படுத்தினேன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நான்எடுத்த முயற்சியால் அந்தமாநில மக்கள் பயனடைந்தனர். தற்போது தேர்தல்காலம். களத்தில் எனது கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் பிரதமர் நரேந்திரமோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாரதிய ஜனதா தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா உலகரங்கில் தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்தப் புகழ் தொடரவேண்டும். மீண்டும் மோடி பிரதமராக மூன்றாவது முறையாக அரியணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணைநிற்க வேண்டும். களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரியவீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருசிறப்பானதொரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி வழங்க வேண்டும். அதற்கு நானும் கட்சிப்பணியை சிறப்பாக ஆற்றவேண்டும் என்பதற்காக ஆளுநர்பதவி நான் துறந்தேன். நான் வாழுகின்ற தமிழ்நாட்டின் தென்சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.

அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும். வாழ்வாதாரத்தை அமைத்து தர வேண்டும் என்ற காரணத்தினால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். தேசிய நீரோட்டத்தில் தென்சென்னையும் இணைந்து தொழில் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வீறுநடை போட வேண்டும் என்ற சிந்தனையால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமாசெய்தேன். எனது சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தென்சென்னை மக்கள் எனக்கு பெரும்ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நான் நிற்கின்றேன், ஆளுநராக இருந்தநான், உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன், விரும்பி வந்திருக்கின்றேன், வெற்றியை தாருங்கள், உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும ...

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை நிர்மலா சீதாராமன் பதிலடி மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வர ...

அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் சென்னை -பெங்களூர் விரைவுச்சாலை சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட் ...

தமிழக ரயில் திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில்  இந்த ஆண்டு ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும ...

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழித்தல் நாட்டின் எந்த மாவட்டத்திலும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் ...

பசுமை நெடுஞ்சாலை திட்டம்

பசுமை நெடுஞ்சாலை திட்டம் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை பசுமை நெடுஞ்சாலைகளாக மாற்றும் ...

2024-25 -ம் ஆண்டு பட்ஜெட் -அமித் ஷா பா ...

2024-25 -ம் ஆண்டு  பட்ஜெட் -அமித் ஷா பாராட்டு 2024-25-ம் ஆண்டு மத்திய பட்ஜெட், மக்கள் நலனையும், வளர்ச்சியையும் அடிப்படையாக கொண்டுள்ளதென மத்திய ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...