தலை நகர் டில்லியில், கடுமையான வாகன போக்கு வரத்தால், காற்று மாசடைவதை தடுக்கும் நடவடிக் கைகளுக்கு உதவும் வகையில், எம்.பி.,க்களுக்கு, இரண்டு 'எலக்ட்ரிக் பஸ்'களை, பிரதமர் மோடி பரிசாக அளிக்கவுள்ளார்.
இது பற்றி, மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்காரி நேற்று கூறியதாவது:டில்லியில் கடும் வாகன போக்கு வரத்தால், காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு உதவும்வகையில், பார்லிமென்ட் எம்.பி.,க்களுக்கு, இரண்டு எலக்ட்ரிக்பஸ்களை, வரும், 21ல் பரிசளிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இந்த பஸ்களில், லித்தியம் – அயன்பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த பயன் படுத்தும் அதிநவீன பேட்டரிகள் இவை; இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கபட்டவை.
பிரதமர் மோடியின், 'இந்தியாவில் தயாரியுங்கள்' திட்டத்தின்கீழ், இந்தபேட்டரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தபேட்டரிகளுக்கு, காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது. இதற்குமுன், இந்த வகை பேட்டரிகள், 55 லட்சம் ரூபாய் விலையில் இறக்குமதி செய்யபட்டு வந்தன. முதற்கட்டமாக, டில்லி சாலைகளில், 15 எலக்ட்ரிக் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். இதன் வெற்றியை பொறுத்து, பிற நகரங்களுக்கும், இத்திட்டத்தை விரிவுபடுத்துவோம்.நாடுமுழுவதும், டீசலில் இயக்கப்பட்டு வரும், 1.5 லட்சம் பஸ்களை, பேட்டரியில் இயங்குப வையாக மாற்ற, அரசு திட்டமிட்டுள்ளது. என்று நிதின் கட்காரி கூறினார்.
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.