எலக்ட்ரிக் வாகனங்களுக்கு உலகம்முழுவதும் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் உற்பத்தியில் பல சிக்கல்கள் இருப்பதுமட்டும் அல்லாமல் போதிய கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாமல் இருப்பதால் வர்த்தகப் பாதிப்பு சற்றுஅதிகமாகவே இருக்கிறது.
இந்த இடைவேளையை உணர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் எலக்ட்ரிக்கார் தயாரிப்பில் இறங்குவது மட்டும் அல்லாமல், இந்தியாவில் தொழிற் சாலையை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
இதற்காக இன்று பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் பிரதமர் மோடியை நேரில்சந்தித்தார்.
பிரதமர் நரேந்திரமோடி வியாழன் அன்று பாக்ஸ்கான் தலைவர் யங் லியு-வை சந்தித்து, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவு படுத்தும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் திட்டங்களை வரவேற்பதாக தெரிவித்தார் மோடி தெரிவித்தார்.
“Foxconn இன் தலைவரான திரு யங்லியுவை சந்திப்பதில் மகிழ்ச்சி. செமிகண்டக்டர்கள் உட்பட இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி திறனை விரிவு படுத்துவதற்கான அவர்களின் திட்டங்களை நான் வரவேற்கிறேன்” என்று மோடி தனது டிவிட்டரிலும் கூறினார்.
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் திட்டம் மூலம் இந்தியாவின் நெட்ஜீரோ இலக்கை அடைய முடியும் என பிரதமர் நரேந்திரமோடி உடனான சந்திப்பில் பாக்ஸ்கான் தலைவர் யங்லியு கூறியுள்ளார்.
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இந்தியாவில் ஏற்கனவே ஸ்மார்ட்போன் தயாரிக்க பல தொழிற் சாலைகளை வைத்துள்ள நிலையில் தற்போது எலக்ட்ரிக்கார் தயாரிக்கும் தொழிற்சாலையும் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
பாக்ஸ்கான் ஜூன் 15ஆம் தேதி தனது முதல்பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையைத் தைவான் நாட்டின் Kaohsiung பகுதியில் துவங்கியது. வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா தொடர்ந்து இந்தியாவிலும் எலக்ட்ரி வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ள பாக்ஸ்கான் நிறுவனம் சொந்தமாக பேட்டரி தொழிற் சாலையைத் துவங்கியது நம்பிக்கை அளிக்கிறது.
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |