இன்று அஸ்ஸாம் செல்லும் பிரதமர் மோடி வரும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபியுடன் போடோ மக்கள் முன்னணி கூட்டணியில் இணைந்ததை அறிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் அசாம் கன பரிஷத் கட்சியுடனும் பிஜேபி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. இதனால் 15 வருட காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் என்பதில் மாற்றமில்லை.
இந்தியாவிலேயே லட்சதீவுகள்-97%, ஜம்மு காஸ்மீர்-69% அடுத்து, மாநில மக்கள் தொகையில் அதிக முஸ்லிம்கள் வாழும் மாநிலம் அஸ்ஸாம் தான். அஸ்ஸாம் மாநிலத்தில் 35% முஸ்லிம்கள் உள்ளனர். கிழக்கு வங்காளம் சுதந்திரம் அடைவதற்கு முன் வெறும் லட்சத்தில் இருந்த அஸ்ஸாம் முஸ்லிம் மக்கள் தொகை வங்காள தேசிகளின் ஊடுருவலால் தற்பொழுது ஒரு கோடியே இருபது லட்சமாக உயர்ந்துள்ளது.
இப்படி உள்ளே நுழைந்த வங்கதேச முஸ்லிம் மக்களின் ஓட்டுக்களுக்காக அவர்களை நிரந்தர குடிமையாளர்களாக உருவாக்க வசதியாக Illegal Migrants (Determination by Tribunal) – IMDT என்ற சட்டத்தை 1983ல் அசாம் மாநிலத்துக்கு மட்டும் கொண்டு வந்து மீண்டும் இந்தியாவை திட்டமிட்டு கூறு போட சதி செய்தது இந்திராகாந்தியின் காங்கிரஸ் அரசு.
பின்னால் இந்த சட்டம் 2004ல் பிஜேபி அரசாலும் 2005ல் உச்சநீதிமன்றத்தாலும் இந்த சட்டம் நிராகரிக்கபட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து வெற்றி கண்ட அன்றைய அஸ்ஸாம் கன பரிஷத் தலைவரான சர்பானந்த சோனாவல்தான் தற்பொழுது அஸ்ஸாமில் பிஜேபி மாநில தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்.
இந்த சட்டத்தை எதிர்த்து கிளம்பிய அஸ்ஸாம் மக்களின் புரட்சியை முன்னின்று நடத்திய அஸ்ஸாம் மாணவர்கள் இயக்கம் அஸ்ஸாம் கன பரிஷத் என்ற பெயரில் பிரபல குமார் மகந்தா தலைமையில் இந்திராகாந்தி மரணத்திற்கு பின் உண்டான அனுதாபத்தையும் மீறி 1985 ல் ஆட்சியை பிடித்ததில் இருந்து பாதிக்கபட்ட அஸ்ஸாம் இந்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். இப்படி காங்கிரசுக்கு மாற்றாக அஸ்ஸாம் மக்களால் ஏற்கப்பட்ட அஸ்ஸாம் கன பரிசத் உட்கட்சி பிரச்சனையால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிவிட்டது. இந்த கட்சிக்கு தற்பொழுது 10 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
அஸ்ஸாம் மக்கள் தொகையில் 50 லட்சத்துக்கும் மேல் போடோக்கள் என்ற பூர்வக்குடி மக்கள் உள்ளனர். அஸ்ஸாமை பிரித்து போடோலாந்து என்று தனிமாநில கோரிக்கையையுடன் அரசியல்களத்தில் நிற்கும் போடோலாந்து மக்கள் முன்னணிக்கு 2011ல் தேர்தலில் 12 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர்.
அடுத்து அஸ்ஸாமில் ஊடுருவிய பங்களாதேசிகள் படிப்படியாக அஸ்ஸாமை ஆக்கிரமித்து அஸ்ஸாம் யுனைடட் டெமாக்ரடிக் ஃபிரண்ட். (AIUDF). என்று கட்சி பக்ருதீன் அஜ்மல் என்ற வங்காளதேசியால் ஆரம்பிக்கபட்டு தற்பொழுது 18 எம்எல்ஏக்களும் 3 எம்பிக்களும் அந்த கட்சிக்கு உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 68 தொகுதி களில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி 2014ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதியை மட்டுமே கைப்பற்றி படு தோல்வியடைந்தது. மாறாக சட்டமன்ற தேர்தலில் வெறும் 5 தொகுதிகளை மட்டும் பிடித்த பிஜேபி
நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் 7ஐ பிடித்து சரித்திர வெற்றி பெற்றது.
இந்த ஆண்டில் அஸ்ஸாமில் காங்கிரசின்15 வருட ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் கடந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த அஸ்ஸாம் மாநில உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி மாபெரும் வெற்றியை பெற்றது.
எனவே இந்த ஆண்டில் நடைபெறும் அஸ்ஸாம் மாநில சட்ட மன்ற தேர்தலில் பிஜேபி சர்பானந்த சோனாவல் தலைமையில் ஆட்சி அமைக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.
நன்றி விஜெயகுமார் அருணகிரி
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.