சரக்கு, சேவைவரி தொடர்பான மசோதா வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பின்னர் ரூ.50 ஆயிரம் கோடிவரை நெடுஞ்சாலை, விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
பயிர்பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடிவரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசு புதிய துறைமுகங்கள், விமான நிலையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
பெட்ரோல், டீசல் வரிஉயர்வு மூலம் கிடைக்கும் நிதி பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு செயல்படுத்தப் படுகிறது. காங்கிரஸ் ஆட்சியைவிட பா.ஜ.க ஆட்சியில்தான் பெட்ரோல், டீசல்விலை குறைந்துள்ளது.
ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் தற்கொலை விவகாரத்தை காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அரசியலாக் குகின்றன. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட கம்யூனிஸ்டு கட்சி தற்போது கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்கு புகுந்து பிரச்சாரம் செய்கிறது. தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று ரோஹித் கடிதம் எழுதிஉள்ள நிலையிலும் ராகுல் காந்தி தவறான பிரச்சாரம் செய்கிறார்.
2008–ம் ஆண்டுமுதல் 2014–ம் ஆண்டுவரை இதே பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்கள் இறந்துள்ளனர். அப்போது அங்குச்செல்லாத ராகுல்காந்தி இப்போதுமட்டும் சென்று உள்ளார். இது தரம் குறைந்த அரசியலை காட்டுகிறது.
இந்தியாவின் வளர்ச்சியும், பெருமையும் மற்ற நாடுகளைவிட அதிகரித்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் வருகிற சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பற்றி தேர்தல்நேரத்தில் தான் முடிவு செய்யப்படும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர மற்ற கட்சிகள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள்தான். அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிக்கு மாற்றம்வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் பா.ஜ.க.,வின் செல்வாக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கர்நாடகத்தில் அடுத்த சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைபிடிக்கும்.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுமண்டபத்தை நிறுவிய ஏக் நாத்ராணடே 1968–ம் ஆண்டு ஆந்திரமாநிலம் நெல்லூர் வந்தபோது மண்டபம் கட்ட நான் நிதி திரட்டிகொடுத்தேன். அந்த விவேகானந்தர் மண்டபத்தில் இன்று நான் நிற்பது என் வாழ் நாளில் பொன் நாளாகும். இங்கு தெய்வபுலவர் திருவள்ளுவருக்கு சிலை அமைந்துள்ளதும் பெருமைக்குரியதாகும்.
நாகர்கோவிலில் மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு பேசியது
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.