விழுப்புரம் மாவட்டத்தில் 3 கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் 2016-ல் பா.ஜ.க.வின் அங்கம் இல்லாமல் யாரும் ஆட்சிஅமைக்க முடியாது என்ற அளவில் எங்கள்கட்சி பணியை நாங்கள் செய்து வருகிறோம். 234 தொகுதிகளிலும் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
மது வில்லாத, லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத, வளர்ச்சி மற்றும் மலர்ச்சிஅடைந்த தமிழகத்தை பார்க்க வேண்டும் என்று பாஜக. சார்பில் நாங்கள் இந்நாளில் சபதம் ஏற்கிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் 3 கல்லூரி மாணவிகள் தற்கொலை சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. அரசுக்கு மாணவி களிடம் இருந்து எப்போதெல்லாம் கோரிக்கை வந்தது? அதை மாநில, மாவட்ட நிர்வாகம் எந்த வகையில் பரிசீலித்தது? என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
தமிழகத்தில் கல்வி வியா பாரமாகி கொண்டிருப்பது என்று சொல்வதைவிட, கல்வி வினையாகி கொண்டு இருக்கிறதோ? என்ற பயம் உருவாகி இருக்கிறது. இது வரை இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒருகோரிக்கை வைத்தால் கூட அதற்கு செவிசாய்க்கப் படவில்லை என்றால், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்வது என்ன? இந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக. சார்பில் உண்மை கண்டறியும் குழுவை நியமித்து இருக்கிறோம். அரசாங்க நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட 3 இடத்தில் அந்தமாணவிகள் சேர்ந்து இருக்கிறார்கள். அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அந்த நிர்வாகத்திற்கான இடங்களை சரியாக பராமரித் தீர்களா? என்ற முழுமையான அறிக்கையை தமிழக அரசு கொடுக்க வேண்டும்.
அரசியல் பின் புலம், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நடத்தும் கல்லூரியாக இருந்தாலும் அடிப்படை கட்டமைப்புகள் இருக்கிறதா? என்பதை போர்க் கால அடிப்படையில் பார்க்க வேண்டும். மாணவ-மாணவிகள் தற்கொலை அதிகமாகிகொண்டே இருக்கிறது. எனவே முதல்-அமைச்சர் இதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதுவரை தமிழக அமைச்சர்கள் யாரும் அங்கு சென்று பார்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது .
தமிழகத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு, கூட்டணி எப்படி இருக்கிறது? என்ற கேட்கிறிர்கள் . தமிழகத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி பேச்சு வார்த்தை மிகச்சிறப்பாக சென்றுகொண்டு இருக்கிறது. மக்களுக்கு நலன் தரும் கூட்டணியை விரைவில் அமைப்போம். பிப்ரவரி 2-ந் தேதி கோவையில் நடைபெறும் அரசாங்க விழாவில் கலந்து கொள்வ தற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். பாஜக. சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்த தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறினோம். அவரும் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, அன்று மாலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை கோவையில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இது தமிழக தேர்தல் வரலாற்றில், முயற்சியில் திருப்புமுனையாக அமையும்.
பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கமலாலயத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றிவைத்த. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியது,
.
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.