பிரதமர் நரேந்திர மோடியின் கோவைவருகை பா.ஜ.க.,வுக்கு புதிய எழுச்சியை தரும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க் கிழமை) கோவைவருகிறார். இதையொட்டி கோவையில் பா.ஜனதா சார்பில் இருசக்கர வாகன பேரணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கிவைத்தார்.
கோவைவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மோடி பேசும் பொதுக்கூட்டத்தில் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் இதுவரை கண்டிராத சாதனை நிகழ்வாக இந்த பொதுக் கூட்டம் அமையும். மோடியின் கோவை வருகை பாரதீய ஜனதாவுக்கு புதிய எழுச்சியை கொடுப்பதாகவும், தமிழக அரசியலை புரட்டிப்போடும் நிகழ்வாகவும் அமையும்.
தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தபிரச்சினையை மனிதாபிமானத்தோடு பார்க்கவேண்டும். மீனவர் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச்சென்று 3 முறை இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 1½ ஆண்டில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து மத்திய அரசின் முயற்சியால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர் பிரச்சினையை தீர்க்க ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.