பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை உச்சகட்ட பாதுகாப்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருவதால் கோவை மாநகரம் மற்றும் கோவை மாவட்டம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன.

கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் ரூ.650 கோடி செலவில் மருத்துவகல்லூரி கட்டிடம், புற நோயாளிகள் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவை மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கும் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இந்த விழாவில் பங்கேற்று புதிய கட்டிடங்களை திறந்துவைப்பதற்காகவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கோவை வந்துசேரும் பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கிருந்து லீ மெரிடியன் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார்.

பின்னர் பிரதமர்  அங்கிருந்து காரில்புறப்பட்டு 3.30 மணிக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு வருகிறார். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய கட்டிடங்களை திறந்துவைத்து தமிழக அரசிடம் ஒப்படைக்கிறார்.

இவ்விழாவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலை வகிக்கிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பி.மோகன், நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தொகுதி எம்.பி. பி.நாகராஜன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கின்றனர்.

திறப்புவிழா முடிந்ததும் பிரதமர் மோடி கார் மூலம் மாலை 4.45 மணிக்கு கொடிசியா மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பா.ஜ.க., பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், பண்டாரு தத்தாத்ரேயா, அகில இந்திய பாரதிய ஜனதா பொதுச்செயலாளர் முரளிதரராவ், தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்  உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அங்கிருந்து மாலை 6 மணிக்கு காரில்புறப்பட்டு கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னர் 6.30 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 போலீஸ் ஐ.ஜி.க்கள் தலைமையில் 2 டி.ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில், 35 போலீஸ் சூப்பிரண்டுகள், 50 உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் என 6 ஆயிரம்பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகம் மற்றும் பொதுக் கூட்ட மைதானத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் கோவை வந்து உள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் தனிப்பிரிவு (எஸ்.பி.ஜி.) ஐ.ஜி. யஷ்வந்த்குமார் ஜெத்வா தலைமையில் பாதுகாப்பு அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகம், கொடிசியா மைதானம், பிரதமர் பயணம் செய்யும் சாலைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கோவை நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

கொடிசியா மைதானத்தில் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியில் உள்ளனர்.

பிரதமர் பயணம் செய்வதற்காக குண்டுதுளைக்காத 3 கார்கள் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுக் கூட்ட மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்சார விளக்குகள் உள்பட அனைத்து பொருட்களும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.

பிரதமரின் வருகையையொட்டி, கோவை அவினாசி சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...