பெங்களூரில் 3 நாட்கள் நடை பெறும் சர்வதேச முதலீட்டா ளர்கள் மாநாட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்.
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் சர்வதேச தொழில்முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள காயத்ரி விகாரில் காலை 10 மணியளவில் தொடங்கியது. இந்த விழாவில் அருண்ஜெட்லி பேசியதாவது:-
சர்வதேசளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டபோது இந்தியாவில் அதன்பாதிப்பு எதுவும் இல்லை. அப்போது, உலக நாடுகள் ஸ்தம்பித்தபோது இந்தியா நிமிர்ந்து நின்றது.
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், தனியார்துறை முதலீடுகளை அதிகரிப்பதிலும், கிராமப் புறங்களின் தேவைகளை நிறைவேற்று வதிலும் இன்னும் அதிக சவால்கள் காணப்படுகிறது.
போட்டி மனப் பான்மை கொண்ட கூட்டாட்சி இந்தியாவில் நிலவுகிறது. ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களைவிட அதிகளவில் முதலீடுகளை ஈர்ப்பதில் முனைந்து செயல்படுகிறது. வறுமையை குறைப்பதற்கு இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதை தவிர வேறுவழியில்லை என்று அவர் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.