நம் நாட்டில் பெட்ரோல், டீசல் பயன் பாட்டிற்கு 80% அளவுக்கு கச்சா எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சவூதிஅரேபியா, ஈராக், வெனின்சுலா, குவைத், நைஜீரியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,ஈரான் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கு நாம் வருடத்திற்கு சுமார் 7லட்சம் கோடி ரூபாய் பணத்தினை இதற்காக அமெரிக்க டாலராக மாற்றி சம்பந்தபட்ட நாடுகளுக்கு பட்டுவாடா செய்கிறோம். நாம் கச்சா எண்ணை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிடையாது.
இந்த இடத்தில் தான் மோடி என்ற பிசினஸ்மேன் உச்சத்தில் வந்து அமர்கிறார். எல்லா உற்பத்தியாளர்களுமே தங்களின் பொருட்களை அதிகளவில் நுகர்வோரிடம் விற்பனை செய்ய நினைப்பார்கள். அதுவும் அதிகளவில் வாங்கினால் நிறைய சலுகைகள் அளிப்பார்கள். இதை உபயோகித்து கொள்வது தான் பிசினஸ் மூளை..
இந்தியாவிற்கு அபுதாபியில் இருந்து அதிகளவில் கச்சா எண்ணை இறக்குமதி செய்தால் பதிலுக்கு இந்தியாவிற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று மோடி அபுதாபி இளவரசரிடம் கேட்க பதிலுக்கு அவரோ அள்ளி கொடுத்து விட்டார்.
அதாவது அபுதாபியில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய எண்ணெய் நிறுவனமான "அட்னாக்" அந்த நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணையை இந்தியாவில் உபயோகித்தது போக 15 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முன்வந்துள்ளது. இது எதற்கென்றால் ஆத்திர அவசரத்திற்கு யாரையும் எதிர் பார்க்காமல் இந்தியா எடுத்து பயன் படுத்தி கொள்ளலாம்.. பதிலுக்கு…ஒரு போன் போட்டு சேக்ஜி ஒரு பத்து டன் அவசரமாக தேவைப்படுகிறது எடுத்து கொள்கிறோம் என்று சொன்னால் போதும்.
ஓசியாக கொடுக்கும் பொழுது ஒரு சின்ன கண்டிசன் போட்டுள்ளார்கள். அதாவது 15 லட்சம் டன் கச்சா எண்ணெயில் 10 லட்சம் டன் கச்சா எண்ணெயை மட்டும் ப்ரீயாக எடுத்து கொள்ளுங்கள் மீதியை கணக்கில் வைத்து கொள்ளுங்கள் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்.. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் 50 நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்யவும் அபுதாபி முன் வந்துள்ளது.
எப்படியெல்லாம் இந்த சேக்குகள் வெள்ளந்தியாக இருக்கிறார்கள் என்று நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.சும்மா துட்டு கொடுத்தாலே பொருள் கிடைக்காத இந்த காலத்தில் நம் நாட்டிற்கு பணம் வாங்காது கச்சாஎண்ணெயை அனுப்பி வைத்து இந்தியாவிற்கு அவசரமாக தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்க சொல்லும் அபுதாபி இளவரசரின் குணம் சொக்கதங்கம்..
இப்படி எல்லாம் இவர்கள் வருவார்கள் என்று நினைத்தே கச்சா எண்ணையை அவசர தேவைக்காக சேமித்து வைக்க அண்டர் கிரவுண்டில் சேமிப்பு குடோன்கள் ஆந்திராவில் விசாகப்பட்டினம், கர்நாடகாவில் மங்களூரில் கட்டி வைத்துள்ளோம். இவற்றில் சுமார் 53 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமிக்க முடியுமாம்..
அபுதாபி கொடுக்கிற 15 லட்சம் டன் போக மிச்சம் இருக்கிற இடத்தில் என்ன செய்யலாம் என்று பெட்ரோலிய மந்திரி தர்மேந்திர பிரதான் மோடியிடம் கேட்க, பொறுங்கள்… அடுத்தமாதம் குவைத் சேக்கை கூப்பிடுவோம் மிச்சத்தை அவர் வந்து நிரப்புவார் என்றிருக்கிறார்.
Thanks to Vijayakumar Arunagiri
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.