‘ஸ்டார்ட் அப்’ திட்டத்தில் இந்தியாவில் 8 சதவீத பெண்களே புதிய தொழில் முனைவோர்களாக இணைந்துள்ளதாகவும், பெண்களின் பங்களிப்பை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மத்திய அரசு ‘ஸ்டார்ட் அப் இந்தியா (தொடங்கிடு இந்தியா)’ திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோருக்கான உதவிகள், கடன்வசதி, புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை உருவாக்கித்தரவும் அரசு முடிவு செய்துள்ளது.
கோவை கொடிசியா தொழில்காட்சி அரங்கில் இந்திய தொழில்வர்த்தக சபை, யங் இண்டியன்ஸ், சிஐஐ ஆகிய அமைப்புகள் சார்பில் ஸ்டார்ட் அப்இந்தியா, கண்காட்சி இரண்டாம்கட்ட விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்தியவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசியதாவது:
இந்தியாவில் 8 சதவீத பெண்களே தொழில் முனைவோர் களாக உள்ளனர். இது வருந்தத்தக்க செய்தி. தொழில் துறையில் பெண் கள் பங்களிப்பை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ‘ஸ்டார்ட் அப்’ இந்தியா திட்டத்தில் தொழில் முனைவோரை கட்டுப்படுத்தும் அமைப்பாக அரசு இருக்காது. மாறாக, அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் அமைப்பாக இருக்கும். அதேபோல், தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சினைகள் குறையும். தொழில் நிறுவனங்களில் கீழ்மட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வுசெய்வதிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரும்.
கோவையில் இயற்கையாகவே தொழில்முனைவு நல்ல முறையில் இருக்கிறது. அதனால் இத்திட்டம் நல்ல பயனை ஏற்படுத்தும். கடந்த 13 மாதங்களாக இந்தியாவின் ஏற்றுமதிகுறைந்து வந்தாலும் கூட, நடுத்தர மக்களின் வாங்கும்திறன், தேவை உள்ளிட்ட காரணங் களால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.