ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும்’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஸ்டார்ட்அப் விருதுவழங்கும் நிகழ்ச்சி இன்று (மே 9) நடந்தது. இதில், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று விருது வழங்கினார். பின்னர் அவர்பேசியதாவது: கர்நாடாகவில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி., என்றாலும் சிலவிஷயங்களை சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.,வும் மோடியும் என்ன செய்தார்கள் என்றுகேட்கலாம். உள்ளூர் சந்தையில் தேவைக்கு இருப்பதை போல மீதியை ஏற்றுமதி செய்யலாம்.
நிறைய உற்பத்திசெய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் அரசு அதற்குவிடவில்லை. அளவோடு உற்பத்தி செய்யமட்டுமே அனுமதி இருந்தது. சோசலிசம் பாணியில் இருந்து திட்டமிட்ட நிலையில், தற்போது நம்மஉற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இயற்கையான கொள்கைமாறுதல் செய்தது மோடி அரசு. 2021 பட்ஜெட்டில் பொது துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம்கிடையாது என அறிவிக்கபட்டது. நாட்டு நலனுக்காக சில இடங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும். எல்லா இடங்களிலும் தனியார்துறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்களை தவிர, தனியாருக்கு எங்குவாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கு தேவையானதை தொலைநோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது. சின்னசின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. ஸ்டார்ட் அப் துறையில் கோவை முன்னோடியாக இருக்கவேண்டும். பின்டெக் ஸ்டார்ட் அப் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கின்றது. வெப்-3 டெக்னாலஜி, செயற்கை அறிவு பயன்படுத்தி, ஸ்டார்அப் தொழில்முனைவார் அடுத்தகட்டத்துக்கு செல்லவேண்டும். கோவை வழிகாட்ட வேண்டும் என்பது எனதுவிருப்பம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |