இந்த முறை பணம் விவசாயிக்கு போகப்போகிறது

ஒரு சாமானிய பொதுஜனம் இன்று வரி கட்ட தயாராகி வருகிறான்… காரணம் மத்திய அரசு…
ஏன் வரி கட்ட வேண்டும் என்று அவன் கூறும் காரணங்கள் மிக மிக அருமை… உண்மை… எதார்த்தம்…

நான் ஒன்றும் பணக்காரன் இல்லை. கடன் இருக்கிறது. ஆனால் வரி கட்ட தயக்கம் இல்லை. காரணம், எனக்கு நன்றாக தெரியும், இந்த முறை பணம் விவசாயிக்கு போகப்போகிறது. கிராம முன்னேற்றத்துக்கு போகப்போகிறது. சாலைகள் மேம்படும். போக்குவரத்து அங்கிருந்து சிறப்பாக இருக்கும்.

இடைத்தரகர்கள் நீக்கப்படுகிறார்கள். இணையதள வியாபாரம் பெருகப்போகிறது. 66 ஆண்டுகளாக ஏமாற்றத்தை தவிர, பொய்யை தவிர, வறுமையை தவிர வேறு எதையுமே சந்தித்திராத என் விவசாயி இனி பணம் பார்ப்பான். நான் சற்று குறைவாக பார்க்கவேண்டும் என்றால் பரவாயில்லை. யாரோ நல்லவர்கள் நன்றாக இருக்கப்போகிறார்கள். அதுவும் உதவி தேவைபடுபவர்கள் சுகப்படபோகிறார்கள்.

இத்தனை ஆண்டுகள், பல தலைமுறைகள் முதுகு ஒடிய உழைத்த என் விவசாய சகோதரனுக்கு நல்ல காலம்.
விவசாயிகளுக்கு கடன் ரத்து கிடையாது. ஆனால் இத்தனை சலுகைகள் கிடைத்த பின் வெட்கமின்றி கடனை ரத்து செய்யவில்லையே என்று கேட்கிறான்? கடன் வாங்குவது நீ? அடைப்பது நானா? வெட்கமில்லை?
மோடியின் திட்டத்தை பாருங்கள். முதலில் விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவேண்டும். உற்பத்தியை பெருக்க வேண்டும். நீர் ஆதாரத்தை அதிகரிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்தினால் மாடுகளுக்கு வேலை. அவை இனி கொல்லப்படாது. நாட்டு பசு மாட்டை கொன்று பணம் சம்பாதிப்பதை விட உயிரோடு வைத்து சோறு போட்டு நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்று நிலையை மாற்றினால் ஹிந்து முஸ்லிம் எல்லோரும் போட்டி போட்டு மாட்டை காப்பாற்றுவார்கள். உர இறக்குமதி குறையும்.


குறையும். உற்பத்திக்கான செலவுகள் குறையும். அப்போது லாபம் அதிகரிக்கும். இன்று வெறும் 3% சதவிகித மக்கள் வரி கட்டுகிறார்கள். விவசாயத்தை லாபகரமாக மாற்றினால் அவர்களிடமும் வரி வாங்கலாம். லாபம் நிறைய வருவதால் அவர்களும் சந்தோஷமாக வரி கட்டுவார்கள். வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகமானால் ஏற்கனவே வரி கட்டிக் கொண்டிருப்போருக்கு சலுகைகள் வழங்குவதில் சிக்கல் இருக்காது.

நாட்டுக்காக 3% வரி கட்டுவோரை வைத்தே இவ்வளவு செய்யமுடியும் என்றால் இதை அப்படியே ஒரு 10% ஆக மாற்றினால்? அருமையான திட்டம். இல்லாதவனுக்கு பிழைப்பு ஏற்படுத்தி கொடுத்துவிட்டு பிறகு அவனுக்கு வரி விதிக்க வேண்டும். அருமை. பரவாயில்லை மோடி அவர்களே, நான் கட்டுகிறேன் வரியை. எனக்கு சலுகைகள் வேண்டாம். நான் கட்டுகிற வரி சரியானவர்களுக்கு செல்கிறது, வீணாகவில்லை, ஊழல்வாதிகளுக்கு போகவில்லை என்று மட்டும் எனக்கு காட்டுங்கள் போதும்.


தான் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்தா என் பாட்டன்கள் அன்று சிறை சென்றார்கள்? நாடு நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து சென்றார்கள். இன்று நான் சிறையெல்லாம் செல்ல வேண்டாம். ஆனால் எனக்கு என்ன பயன் என்று யோசிக்காமல் வரிதானே, நான் கட்டுகிறேன், தவறு எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் போதும் என்ற எண்ணத்தை வளர்த்துகொண்டால் போதும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...