டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம்

2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அளித்த 295 வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றியுள்ளது. திமுகவைபோல் அல்ல.

கோவைக்கு மோடி என்ன செய்திருக்கிறார் என்பது ஒவ்வொரு சாமானியனுக்கும் தெரியும். அதை அண்ணாமலை வந்துசொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசால் செயல்படுத்தப் பட்டவை ஆகும். கமிஷன்வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே முந்தைய ஆட்சியாளர்கள் பாலங்களை கட்டிஉள்ளனர்.

கோவை மக்களவை தொகுதியை சிறப்பானமுறையில் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறோம். மத்திய அரசுக்கும் கோவைக்கும் நான் ஹாட்லைனாக செயல்படுவேன். கோவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்.

யார் என்ன சொல்கின்றனர் என்பதை முழுமையாக எடப்பாடி கேட்ப தில்லை. பணம் கொடுக்காமல் கோவையில் ஜெயித்துகாட்ட முடியும். தேசியஜனநாயக கட்சியின் தொண்டர்கள் தங்களது கைகாசை போட்டு கட்சிக்காக செலவழிப்பார்கள். இதுதான் மாற்று அரசியல். எடப்பாடி பழனிச்சாமி டீ குடிப்பதற்குக் கூட யாரிடமாவது பணம் வாங்கித்தான் குடிப்பார்போல் தெரிகிறது. அதனால்தான் அதை உதாரணமாக பேசி இருக்கின்றார். நாங்கள் டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் டீ குடிப்போம். இதுதான் எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.

உதயநிதி ஸ்டாலின் ஒருசெங்கல்லை கையில் எடுத்துக்கொண்டு செல்லும் அளவிற்கு தான் அவரது அறிவு இருக்கிறது. அரசியலில் பக்குவப்படாதவர். பணபலத்தை வைத்து அண்ணாமலையை ஜெயிக்க பார்க்கின்றனர். இதற்காக திமுக அதிமுக வேட்பாளர்கள் இணைந்துகூட செயல்படுவார்கள். ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் திட்டங்களுக்கு கமிஷன்பெற்று செயல்பட்டுள்ளனர்.

இத்தகைய ஆக்கபூர்வமற்ற செயல்களால் கோவைநகரம் சூடானது தான் மிச்சம். கோவை நகரில் ஆரோக்கியமான சாலைகள் இல்லை. சிறப்பான பூங்காக்கள் இல்லை. கோவை சார்ந்த தேர்தல்அறிக்கை ஏப்ரல் இரண்டாவது வாரம் வெளியிடப்படும்.

ரஷ்யாவின் ஸ்டாலினுக்கும், இங்கிருக்கும் ஸ்டாலினுக்கும் எந்தவித மாறுபாடும் கிடையாது. ஜனநாயகத்தை பற்றி பேச ஒரு தலைவருக்கு உரிமை இல்லை என்றால் அது ஸ்டாலின் மட்டுமே. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையா ...

மோடி – டிரம்ப் தொலை பேசி உரையாடல் பிரதமா் நரேந்திரமோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய ...

காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய முதலீடு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவ ...

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் மாஸ்டர் பிளான் திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள ...

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது

தவறு இண்டிகோவிடம் தான் உள்ளது தவறு இண்டிகோவிடம்தான் உள்ளது என்றும், விரைவில் நிலைமை சீராகிவிடும், ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் ...

இந்தியாவுக்கு மோடி பிரதமராகக் கிடைத்தது அடித்த அதிர்ஷ்டமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , பிரதமர் நரேந்திரமோடியின் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...