என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்புவிழாவுக்கு போவேன்’ என்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.
கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற முதல் எம்.பி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் சுரேஷ் கோபி. அவருக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி இணை அமைச்சராக பதவி ஏற்றபிறகு துறை ஒதுக்கப்படுவதற்கு முன், ‘நான் சினிமாவில் நடிக்க வேண்டும். எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை’ எனக்கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். அப்போது அவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறின.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சுரேஷ் கோபி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் குருவாயூர் மண்டல கமிட்டி சார்பில் அமைச்சர் சுரேஷ் கோபிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “இனி இரண்டு ஆண்டுகள் நாம் தேர்தல் பிரசாரம்தான் செய்ய வேண்டும். 2025 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் செமி ஃபைனலாகும். நல்லகாரியங்கள் இன்னும் நிறைய நடக்கும்.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |