ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றுவது வழக்கம். இன்றும் ரேடியோ மூலம், "மன் கி பாத்"என்ற நிகழ்ச்சிமூலம் பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் நீர் ஆதாரத்தில் கங்கை நதியின்பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கங்கை நதியை சுத்தப்படுத்துவது குறித்து 30 ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. கங்கை நதியை சுத்தப்படுத்துவதில் அனைவரும் ஈடுபடவேண்டும். இதில் அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. சுத்தமான குடி நீர் காரணமாக நல்ல உடல் நலம் கிடைக்கும். பொருளாதாரம் வலுப்பெறும். வறட்சி கவலையளிக்க செய்கிறது.
இந்த கால கட்டத்தில், நீரை சேமிப்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. மழை நீரை சேமிக்கவும், பாதுகாக்கவும் பிரசாரம் செய்யவேண்டும். குடிநீரை சேமிக்கவும், சிக்கனமாக பயன்படுத்தவும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறினார்.
மேலும் இந்த ஆண்டு பருவநிலை நன்றாக இருக்கும் என்ற செய்தி மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இதையடுத்து மும்பையை சேர்ந்த மாணவி ஷர்மிலா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார். அப்போது மாணவர்களின் கவனம் கற்றலில் மட்டுமே இருக்க வேண்டும்.
இது பள்ளியில் இருந்து கல்லூரிக்கு மாறும்தருணம். உ.பி மாணவியின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது இளைஞர்கள் விளையாட்டு மற்றும் அனைத்து துறைகளிலும் ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. கிராமங்களில் மழை நீரை சேமிப்பது, பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். வறட்சியை கருத்தில்கொண்டு பயிரிடும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும். நாட்டில் நிலவும் வறட்சி கவலை அளிக்கசெய்கிறது. பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.