தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக மாநில பொதுசெயலாளர் மோகன் ராஜூலு கூறியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மே 6ம் தேதி அவர் தமிழகம் வருகைதர இருப்பதாகவும் மோகன்ராஜூலு கூறியுள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் மே 16ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல்கட்சியினர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக, தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக என ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

பாஜக அணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு 73 தொகுதிகளை ஒதுக்கியுள்ள பாஜக பிற தொகுதிகளில் போட்டியிடுகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக மேலிடபொருப்பாளர் முரளிதர்ராவ் உள்ளிட்டோர் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தேர்தல்பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மே 6ம்தேதி தமிழகம் வருகை தர உள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு கூறியுள்ளார். தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியளிக்க வில்லை. ஆளுங்கட்சிக்கு ஒருவிதமாகவும், எதிர்க்கட்சிகளுக்கு வேறு விதமாகவும் செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் காட்சிப்பொருளாக இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...