அனைவருக்கும் வீடுதிட்டத்துக்காக 26 மாநிலங்களில் சுமார் 2,508 நகரங்கள் தேர்வு

பிரதமரின் ஆவாஸ் யோஜனா என்ற அனைவருக்கும் வீடுதிட்டத்துக்காக 26 மாநிலங்களில் சுமார் 2,508 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதாவது நகர்ப்புற ஏழை மக்களுக்கான இந்த மலிவுவிலை வீட்டுத்திட்டம் பற்றி  நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய நகர்ப்புற அமைச்சர் வெங்கய்யா நாயுடு நாடாளுமன்றத்தில் கூறியதாவது:

ஏப்ரல் 25, 2016 நிலவரப்படி 26 மாநிலங்களில் 2,508 வீடுகள் பிரதமரின் அனை வருக்கும் வீடு திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நில நடுக்கங்கள், வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களைத் தாங்கும் விதத்தில் இந்தவீடுகள் வடிவமைக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் நாடுமுழுதும் சுமார் 2 கோடி வீடுகள் கட்டப்படுகின்றன. அதாவது 7 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2022-ல் முடிவடையும். நகர்ப் புறங்களில் வாழும் குறைந்த ஊதியப்பிரிவினர் பயனடைவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகர்ப்புற மக்களில் வீடற்றோருக்கு வீடுவழங்குவது மாநில அரசின் முதன்மை பொறுப்பாகும். மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு உதவும்விதமாக, மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம், ‘நகர்ப்புற வீடட்டோருக்கு புகலிடம்’ என்ற திட்டத்தை நடைமுறைப் படுத்துகிறது.

இதுகுறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள தகவல்களின்படி இதுவரை 770 புகலிடங்கள் மாநிலங்களினால் வழங்கப் பட்டுள்ளது, இதில் 38,770 பேர் வசிக்கலாம். இடில் 270 புகலிடங்களில் 11,900 பேர் ஏற்கெனவே வசித்து வருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...