மேற்குவங்கத்தில் கூட்டணி; கேரளத்தில் எதிரணி என்ற தங்களது முரண் பாடான நிலைப்பாடு குறித்து காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்கள்மன்றத்தில் விளக்கம் அளிக்கவேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பாஜக சார்பில், கேரளமாநிலம் திருச்சூரில் வியாழக் கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ள காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், கேரளமாநில பேரவைத்தேர்தலில் எதிரெதிர் அணியாக களம் காணுகின்றன. மேற்குவங்கத்தில் கூட்டணி; கேரளத்தில் எதிரணி என்ற தங்களின் முரண்பாடான நிலைப்பாடு குறித்து இருகட்சிகளும் மக்கள் மன்றத்தில் உரியவிளக்கம் அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கேரளத்தில் அண்மையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தனது தேசப்பற்று குறித்து பாஜக கேள்வி எழுப்புவதாக அவர் ஆதங்கப் பட்டார். சோனியா காந்தியின் தேச பக்தியை நாங்கள் நன்றாக அறிவோம். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.12 லட்சம்கோடி அளவுக்கு ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளன. அப்போது எங்கே போனது அவரது நாட்டுப்பற்று?
கேரளத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர்கள் சுமார் 250 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால், இந்தவன்முறை மிரட்டல்களுக்கெல்லாம் பாஜக அடிபணியாது. கேரளத்தில் ஆட்சி அமைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.