தமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர் வழிப் பாதைகளாக மாற்றுவோம்

தமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர் வழிப் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்த மட்டும் ரூ.16 ஆயிரம்கோடி செலவிடப்படுகிறது. இதில் தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில்

எல் அன்ட்டி இறக்குமதி முனையம், ரூ.760 கோடியில் வடக்கு சரக்குதளம் விரிவாக்கம், ரூ.80 கோடியில் உணவு தானியங்களுக்கான தனிதளம், ரூ.1,200 கோடியில் கூடுதல் சரக்குபெட்டக முனையம், ரூ.250 கோடியில் நிலக்கரி தளத்தை மேம்படுத்துதல் ஆகியபணிகள் செய்யப்பட உள்ளன.

பட்ஜெட்டில் விவசாயம், நீர்நிலை மேம்பாட்டுக்காக மட்டும் 4 ஆண்டுகளுக்கு ரூ.80 ஆயிரம்கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள 111 ஆறுகள் நீர்வழிப் பாதைகளாக மாற்றப்பட உள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏ.வி.எம். கால்வாய், தாமிரபரணி, மணி முத்தாறு, பவானி, பாலாறு, காவிரி உள்ளிட்ட 8 ஆறுகள் நீர்வழிப்பாதைகளாக மாற்றப்பட உள்ளன. இதனால் உள்நாட்டு மீன்பிடி, விவசாயம், குடிநீர், நீர்வழி போக்குவரத்து, சுற்றுலா போன்ற துறைகள் வளர்ச்சிபெறும்.

இதேபோல் தமிழகம்- ஆந்திரம் இடையே உள்ள பக்கிங்ஹாம் கால்வாயை நீர்வழிப்பாதையாக மாற்றும் திட்டமும் விரைவில் செயல்படுத்தப்படும்.

இந்த நீர்வழிப்பாதை திட்டம் ஏற்கெனவே கங்கை நதியில் தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நதி நீர் இணைப்பு திட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றும்.

கங்கை நதியை கோதாவரியுடனும், கோதாவரியை கிருஷ்ணா நதியுடனும், கிருஷ்ணா நதியை காவிரியுடனும் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் கங்கை, கோதாவரியில் ஏற்படும் வெள்ளம் காவிரிக்கு ஓடிவரும். காவிரிபிரச்சினைக்கும் தீர்வு ஏற்படும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...