2025-2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் அடல் ஆய்வகங்கள் அரசு பள்ளியில் உருவாக்கப்படும், ஐந்து தேசிய திறன் மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார். குறிப்பாக உலக அளவில் செயற்கை நுண்ணுறிவு துறையில் போட்டியை சமாளிக்கும் வகையில் 500 கோடி ரூபாய் செலவில் புதிய மையம் அமைக்கப்படும் என பட்ஜெட் துறையில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
“உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது என்றார்.
குறிப்பாக உலக அளவில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் சார்ந்த போட்டியை சமாளிக்கும் வகையில் 500 கோடி ரூபாய் செலவில் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மையம் உருவாக்கப்படும் என அறிவித்திருக்கிறார். ஏற்கனவே கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஏஐ மாடல்களை சந்தைப்படுத்தியுள்ளன. கூகுளின் ஜெமினி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, மெட்டாவின் லாமா, சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட ஏஐ மாடல்கள் களத்தில் இருக்கும் நிலையில் இன்னும் சில கால இடைவெளியில் இந்தியாவும் தனது ஏஐ மாடலை உருவாக்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
AI உலகில் பெரிய போட்டி நிலவி வருகிறது. இதனை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள சில வாய்ப்புகள் இருக்கின்றன. அதை பயன்படுத்த வேண்டும் எனில், சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. என்ன மாற்றங்கள் தேவை? பட்ஜெட்டில் இது குறித்த எதிர்பார்ப்புகள் என்ன? என்பது குறித்து சில எதிர்பார்ப்புகளை ‘Ernst & Young’ வெளிப்படுத்தியுள்ளது.
கணக்கியல் மற்றும் தொழில்முறை சேவை நிறுவனங்களில் மிகப்பெரிய 4 நிறுவனங்களைதான் Ernst & Young என்று அழைப்பார்கள். alongside Deloitte, PwC, KPMG இதுதான் இந்த 4 பெரிய நிறுவனங்கள். இவைதான் இந்தியா AI துறையில் முன்னேற சில எதிர்பார்ப்புகளை முன்வைத்திருக்கின்றன.
1.உள்கட்டமைப்பு மேம்பாடு
2.டேட்டா அணுகல் மற்றும் பாதுகாப்பு
3.ஒழுங்குமுறை கட்டமைப்பு
4.தொழிலாளர்களை மேம்படுத்துதல்
இவை நான்கும் இந்தியாவுக்கு கிடைத்தால், நாடு நிச்சயமாக AI துறையில் சீனா, அமெரிக்காவுக்கு இணையான வளர்ச்சியை அடையும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் தவிர வேறு சில நிறுவனங்களும் சில ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் தெரிவித்திருக்கின்றன. EY இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனை பங்குதாரரான ஹரி பாலாஜி கூறுகையில், “இந்தியாவில் AI தொழில்நுட்பங்களை வளர்க்க ரூ.10,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. AI தொழில்நுட்பத்தை பயிற்சி செய்யவும், மேம்படுத்தவும் உயர் செயல்திறன் GPUs மற்றும் டேட்டா சென்டர்கள் மீது ஒதுக்கப்பட்ட நிதி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |