நவீனவிவசாய முறைகளை ஏற்றுக்கொண்ட நாம் அதிலிருந்து என்ன சாதித்தோம்

பசுமைப்புரட்சி என்ற பெயரில் ஏற்கப்பட்ட கொள்கைகளால் விவசாய பொருள்களுக்காக பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கும்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.


 மத்தியப் பிரதேச மாநிலம், நினோராவில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயம் தொடர்பான கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி பேசியதாவது:


 கடந்த 60 ஆண்டுகளாக நவீனவிவசாய முறைகளை ஏற்றுக்கொண்ட நாம் அதிலிருந்து என்ன சாதித்தோம் என்பதை தீவிரமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும். இயந்திரமயமாக்கலை நாம் ஆதரிக்கமுடியாது, ஏனெனில் இந்த முறையிலான விவசாயத்தால், விதைகள், உரங்கள் உள்ளிட்ட விவசாய பொருள்களைப் பெறுவதற்காக விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றனர்.


 பசுமைப்புரட்சி என்ற பெயரில் நாம் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகளால் தான் இந்த நிலை ஏற்படுகிறது.
 விவசாயக் கொள்கைகளை வகுக்கும் போது நாட்டின் பல்வேறு பகுதிகளின் பருவகால நிலைகளையும் அரசு கருத்தில்கொள்ள வேண்டும்.


 தற்போதைய நிலையை மனதில்கொண்டு, பழமையான விவசாயமுறை மற்றும் நவீன விவசாயமுறை ஆகிய இரண்டையும் பயன் படுத்தி வளமான திட்டங்களை உருவாக்குவது, வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை இயற்று பவர்களின் கடமையாகும் என்றார் சுரேஷ் ஜோஷி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...