ரிசர்வ்வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் செயல் பாடுகளால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி.யும், மூத்த தலைவருமான சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ரகுராம் ராஜனை ரிசர்வ்வங்கி ஆளுநராக முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு கடந்த 2013-ம் ஆண்டில் நியமித்தது. அவரது மூன்று ஆண்டு பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் கடந்தவாரம் செய்தியாளர்களைச் சந்தித்த சுப்பிர மணியன் சுவாமி, ரகுராம் ராஜனின் செயல்பாடுகள் சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர்க்கு தற்போது எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ரகுராம் ராஜனின் செயல்பாடுகளை கவனிக்கும் போது, இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டும் என்பதைவிட, அதை சீர்குலைப்பவராகவே அவர் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
ரிசர்வ் வங்கி ஆளுநர்பதவிக்கு தேசியவாத சிந்தனைகொண்ட நிபுணர்கள் பலர் தகுதியுடையவர்களாக இருக்கின்றனர். இப்படியொரு சூழலில், காங்கிரஸ்கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டு, இந்திய பொருளாதார நலன்களுக்கு எதிராகச்செயல்படும் ஒருவரை ஏன் அந்தப்பதவியில் நீடிக்கச் செய்ய வேண்டும்? என்று தோன்றுகிறது.
எனவே, தேசநலனைக் கருத்தில் கொண்டு ரகுராம் ராஜனை பிரதமர் மோடி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். நான் ஏன் இந்தப்பரிந்துரையை முன்வைக்கிறேன் என்றால், வேண்டுமென்றே இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் ரகுராம்ராஜன் எடுத்துள்ள சிலநடவடிக்கைகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதாகக் கூறி வட்டி விகிதங்களை ரகுராம்ராஜன் உயர்த்தியது, இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகுந்தபாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க அரசால் வழங்கப்படும் கிரீன்கார்டை (நிரந்தரக் குடியுரிமை அட்டை) வைத்துக்கொண்டு அவர் இந்தியாவில் இருக்கிறார். அந்த அட்டையை செல்லத்தக்கதாக வைத்திருக்க வேண்டுமெனில், ஆண்டுக்கு ஒரு முறையாவது அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயவிதியை ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்துகொண்டு அவர் கடைப்பிடிப்பது ஏன்?
ஆக, மன ரீதியாக ரகுராம்ராஜன் முழுமையான இந்தியர் அல்ல என்பது தெரிய வருகிறது என்று அந்தக் கடிதத்தில் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.