சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகித்துவரும் ஜெயலலிதா மற்றும் மம்தாபானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அதிமுக.,வும், மேற்குவங்கத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் கட்சியும் முன்னிலை வகித்து வருகின்றன. இதையொட்டி ஜெயலலிதாவுக்கும், மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். தேர்தலில் வெற்றிபெற்றதை முன்னிட்டு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன்.
அதே போல் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தொலை பேசியில் தொடர்புகொண்டு பேசினேன். அவரின் அபார வெற்றிக்கும், இரண்டாவது முறையாக தனது ஆட்சியை தொடங்குவதற்கும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.அசாம்,மேற்குவங்கம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு சேவைசெயய் இன்னும் கடினமாக உழைப்போம் என இதன் மூலம் உறுதியளிக்கிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.அதேபோல் ஜெய லலிதாவுக்கு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். கவர்னர் ரோசய்யா, ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.