மக்கள் நலகூட்டணியை ஒப்பிட்டால் பாஜ.,கட்சி தமிழகத்தில் அதிகவாக்குகளை பெற்றுள்ளதோடு, 4 தொகுதிகளில் 2வது இடம் பிடித்துள்ளது. கன்னியா குமரி மாவட்டத்தின், நாகர்கோவில் தொகுதியில் ஆரம்பம்முதலே திமுகவின் சுரேஷ் ராஜனுக்கும், பாஜகவின் எம்.ஆர்.காந்திக்கும் நடுவேதான் கடும போட்டி இருந்தது. இருவரும் மாறிமாறி முன்னிலை பெற்ற நிலையில், இறுதியில் சுரேஷ் ராஜன் முன்னேறினார். காந்தி 2வது இடத்தை பிடித்தார்.
கன்னியா குமரி மாவட்டத்தின் மற்றொரு தொகுதியான கிள்ளியூரில் காங்கிரசின் ராஜேஷ் குமாருக்கு அடுத்து, பாஜக.,வின் விஜய ராகவன் அதிகவாக்குகள் பெற்றார். இதேபோல விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ.,வான காங்கிரசின் விஜய தாரணிக்கு அடுத்தபடியாக தர்மராஜ் அதிகவாக்குகள் பெற்றார்.
பாஜக வெல்லக் கூடிய தொகுதி என்று கணிக்கப்பட்ட வேதாரண்யத்தில் அதிமுக.,வின் மணியன் வெற்றிபெற்றுள்ளார். 2வது இடத்தை 37 ஆயிரத்து 838 வாக்குகள்பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் பிடித்துள்ளார். பாஜக.,வின் வேதரத்தினம், 37086 வாக்குகளை பெற்று 752 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்தை தவறவிட்டு 3வது இடம் பிடித்துள்ளார். வாக்கு சதவீதத்தை எடுத்துபார்த்தாலும், அதிமுக, திமுக, கூட்டணிகளுக்கு அடுத்தபடியாக பாஜக இடம் பெற்றுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.