அலகாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பா.ஜ.க தேசிய செயற்குழுவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப் படுகிறது.
பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தில் வருகிற 12-ந் தேதி முதல் 2 நாட்கள் நடக்கிறது. அடுத்தாண்டு நடைபெறும் மாநில சட்ட சபை தேர்தலை கருத்தில்கொண்டு, முதல் முறையாக அலகாபாத்தில் தேசிய செயற் குழுவை பா.ஜ.க கூட்டுகிறது.
அலகாபாத் கே.பி.கல்லூரி மைதானத்தில் செயற்குழு கூட்டமும், அங்குள்ள அணிவகுப்பு மைதானத்தில் பிரமாண்ட பொதுக் கூட்டமும் நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை யாற்றுகிறார்.
இந்த செயற்குழு கூட்டத்தில் சுமார் 30 மத்திய மந்திரிகள், 7 மாநில பா.ஜ.க முதல்-மந்திரிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக 500 மீட்டர் நீளம், 380 மீட்டர் அகலத்தில் பிரமாண்டபந்தல் அமைக்கப்படுகிறது. இந்த பந்தல் தீ, வெள்ளம் மற்றும் புயல்போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்காத வகையில் உருவாக்கப் படுகிறது. இதற்காக அலுமினிய கம்பிகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட தகடுகள் பயன்படுத்தப் படுகின்றன.
இந்தபந்தலில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்காக 1,600 சதுர மீட்டரில் சிறப்புபகுதியும், தலைவர்கள் அமர்வதற்காக 192 அடியில் மேடையும் அமைக்கப் படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து வரும் செயற்குழு உறுப்பினர்களுக்காக 400 இருக்கைகள் போடப் படுகின்றன. இந்த பந்தலின் தரைத்தளம் முழுவதும் 4 அங்குல பிளைவுட் தகடுகள் பதிக்கப்படுகின்றன.
செயற்குழு நடைபெறும் 2 நாட்களும் பிரதமர் நரேந்திரமோடி அலகாபாத்திலேயே தங்கியிருப்பதால், பந்தலுக்கு அருகே தற்காலிக பிரதமர் அலுவலகம் ஒன்றும் அமைக்கப் படுகிறது. அத்துடன் மிக மிக முக்கிய பிரமுகர்களுக்கான உணவுக்கூடம் மற்றும் சமைய லறைக்கும் ஏற்பாடுகள் நடக்கிறது.
பந்தல் மற்றும் பிரதமர் அலுவலக கட்டுமானப் பணிகள் அனைத்தும் வாரணாசியை சேர்ந்த பா.ஜ.க மூத்த தலைவர் பிரகாஷ் சந்த் யாதவ் மேற்பார்வையில் நடக்கிறது. செயற்குழு கூட்டம் நடைபெறும் கல்லூரி மைதான ஏற்பாடுகளை மாநில பா.ஜனதா துணைத்தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசுத்தோஷ் தாண்டனும், பொதுக்கூட்டம் நடைபெறும் அணிவகுப்பு மைதான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் சுதந்திரதியோ சிங்கும் கவனித்து வருகின்றனர்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.