மக்களோடு மக்களாக யோகா செய்தார் மோடி

சர்வதேச யோகாதினம் இன்று ஜூன் 21-ம்தேதி உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. இன்று காலை சண்டிகரில் நடந்த யோகா நிகழ்வில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகாதினமாக ஐ.நா. பொதுச்சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.
 
கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடபட்டது. இந்தியா மட்டுமின்றி, உலகின் பலநாடுகளிலும் அன்றைய தினம் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
 
இன்று 2-வது ஆண்டாக சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகாபயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறுகிறது. அதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.
 
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் பிரதமர் மோடி, பொதுமக்களுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி, சண்டி காரில் நடைபெற்றது. அதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல் முறையாக, 150 மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய பயிற்சி, 7.45 மணிக்கு முடிவடைந்தது.
 
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்று, சிறப்பாக ஆசனம் செய்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.8 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப் படுகிறது. எனவே, பங்கேற்பாளர்கள், தாங்கள் யோகாசெய்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடலாம்.
 
‘செல்பி' எடுப்பதற்கான வசதியும் செய்யப் பட்டுள்ளது. டெல்லி கன்னாட்பிளேஸ் பகுதியில், மத்திய அரசும், டெல்லி மாநகராட்சியும் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளன. நாடுமுழுவதும் நடக்கும் யோகா பயிற்சிகளில், பதஞ்சலி யோகா பீடம், வாழும்கலை அறக்கட்டளை, பிரஜாபிதா பிரம்ம குமாரி ஐஸ்வரிய வித்யாலயா போன்ற அமைப்புகளின் தன்னார்வதொண்டர்கள், மத்திய துணை ராணுவப்படையினர்,
 
முக்கிய பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள். இது தவிர, உலகம் முழுவதும் 173 இந்திய தூதரகங்கள், யோகாகுறித்த விழிப்புணர்ச்சியை பரப்ப யோகா பயிற்சிக்கு ஏற்பாடுசெய்துள்ளன. சர்வதேச யோகா தின கொண்டாட்டத்துக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...